கழுத்தை சுற்றிலும் கருமையா இருக்கா… ஒரே வாரத்தில் இதனை சரி செய்ய அருமையான ஹோம் ரெமடி ஒன்னு இருக்கு!!!
Author: Hemalatha Ramkumar2 July 2023, 10:58 am
கழுத்தை சுற்றி ஒரு சிலருக்கு கருமையான நிறம் காணப்படும். பலர் இந்த பொதுவான பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் மோசமான சுகாதாரம், ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் ஒரு சில நோய்கள் காரணமாகவும் கழுத்தை சுற்றி கருந்திட்டுகள் படியலாம். இது ஒரு விதமான சங்கடமான உணர்வை ஏற்படுத்துகிறது. இத்தகைய பிரச்சினைக்கு உதவக்கூடிய ஒரு சில வீட்டு வைத்தியங்கள் பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
எலுமிச்சை சாறு ஒரு இயற்கை ப்ளீச்சிங் ஏஜென்ட் ஆக செயல்பட்டு கழுத்தை சுற்றி இருக்கக்கூடிய கருமையை போக்க உதவுகிறது. இதற்கு ஒரு காட்டன் பஞ்சை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் எலுமிச்சை சாற்றை பிழிந்து அதனை கழுத்தில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் ஊறவைத்து, பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதனை வாரம் இரு முறை செய்து வந்தால் கட்டாயமாக நல்ல முன்னேற்றம் தெரியும்.
கற்றாழையில் ஈரப்பதமூட்டும் பண்புகள் மற்றும் சருமத்தை ஆற்றக்கூடிய பண்புகள் காணப்படுகிறது. ஆகவே இது கழுத்தை சுற்றி இருக்கக்கூடிய கருமையை போக்க வல்லது. இதற்கு ஃப்ரஷான கற்றாழை ஜல்லை நேரடியாக கருப்பாக இருக்கக்கூடிய பகுதியில் தடவி 20 நிமிடங்கள் ஊறவைத்து பின்னர் கழுவுலாம். இதனை தினமும் பயன்படுத்தி வருவது கருந்துட்டுகளைப் போக்கி சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
சருமத்தை வெண்மையாக்க மஞ்சள் நீண்ட காலமாக பயன்பாட்டில் உள்ளது. இதனை பாலுடன் கலந்து பயன்படுத்தும் பொழுது, அது சருமத்தில் இருக்கக்கூடிய கருமையை எளிதில் போக்குகிறது. இதற்கு மஞ்சள் தூளோடு பால் கலந்து ஒரு திக்கான பேஸ்டை தயார் செய்யவும். இந்த பேஸ்ட்டை கழுத்தை சுற்றி இருக்கக்கூடிய கருமையான சருமத்தில் தடவவும். 15 முதல் 20 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவவும். இவ்வாறு வாரம் இரண்டு முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.