உங்க வீட்ல தேங்காய் எண்ணெய் இருக்கா… அப்படின்னா பொடுகு பிரச்சனையிலிருந்து நீங்க ஈசியா எஸ்கேப் ஆகிடலாம்!!!

Author: Hemalatha Ramkumar
20 September 2024, 2:11 pm

பொடுகு என்பது நமது மயிர்கால்களில் ஏற்படக்கூடிய ஒரு பொதுவான பிரச்சனையாகும். இதனால் அரிப்பு, வெள்ளை நிற திட்டுகள் போன்றவை உருவாகும். இது ஒருவருக்கு அசௌகரியத்தையும், சங்கடமான சூழலையும் ஏற்படுத்தும். உலக அளவில் கிட்டதட்ட 50% நபர்கள் தங்களுடைய வாழ்க்கையில் ஏதாவது ஒரு சமயத்திலாவது பொடுகு பிரச்சனையை சந்தித்துள்ளனர். பொடுகு பிரச்சனையை சமாளிப்பதற்கு பல்வேறு ப்ராடக்டுகள் விற்பனை செய்யப்பட்டாலும் இந்த தொடர்ச்சியான பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெறுவதற்கு பல்வேறு வீட்டு வைத்தியங்களையும் பலர் முயற்சி செய்து வருகின்றனர். அவ்வாறான ஒரு சில வீட்டு வைத்தியங்களை இப்போது பார்ப்போம். 

தேயிலை மர எண்ணெய்

நீண்ட காலமாக இது பொடுகுக்கு எதிராக ஒரு சிறந்த கருவியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் பொடுகுக்கு காரணமான நுண்ணுயிரிகளை அழிக்கிறது. பூஞ்சை காரணமாக ஏற்படும் தோல் நோய்களை சமாளிக்க பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு சில சிகிச்சைகளை விட தேயிலை மர எண்ணெய் சிறப்பாக செயல்படுவதாக ஆய்வுகள் கூறுகிறது. 

தேங்காய் எண்ணெய் 

தேங்காய் எண்ணெய் வெறும் சமையலுக்கானது மட்டுமல்ல. இது உங்களுடைய மயிர்கால்களுக்கு பல்வேறு அதிசயங்களை செய்யும் ஒரு பொருள். தேங்காய் எண்ணெய் தோலுக்கு ஈரப்பதம் அளித்து, வீக்கத்தை ஆற்றி மயிர்கால்களில் உள்ள நுண்ணுயிரிகளை அழிக்கிறது என்று ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் இயற்கையான நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் பூஞ்சை காரணமாக ஏற்படும் பொடுகை விரட்டுகிறது. சிறந்த முடிவுகளுக்கு ஷாம்பு பயன்படுத்துவதற்கு முன்பு உங்கள் தலைமுடியில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் தடவி மசாஜ் செய்யவும். 

இதையும் படியுங்கள்: இந்த பொருள் உங்கள் தலைமுடி பிரச்சினைக்கு தீர்வாக இருக்கும்னு நினைத்து கூட பார்த்திருக்க மாட்டீங்க!!!

கற்றாழை பெரும்பாலானவர்களின் வீடுகளில் வளர்க்கப்படும் கற்றாழை பொடுகுக்கு எதிரான ஒரு ரகசியமான ஆயுதமாக அமைகிறது. சரும ஆற்றும் பண்புகளுக்கு பெயர் போன கற்றாழையில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளும் உள்ளது. எனவே இது பூஞ்சைக்கு எதிராக சண்டையிட்டு வீக்கத்தை குறைக்கிறது. இவை இரண்டுமே பொடுகுக்கு காரணமாக அமைகின்றன. இந்த நன்மைகளை பெறுவதற்கு கற்றாழை ஜெல்லை நேரடியாக உங்களுடைய மயிர்கால்களில் தடவவும். 

மன அழுத்த கட்டுப்பாடு 

மன அழுத்தம் என்பது நேரடியாக பொடுகு பிரச்சனையை ஏற்படுத்தாது என்றாலும் கூட அதன் அறிகுறிகளை மன அழுத்தம் மோசமாக்கலாம். அதிகமான மன அழுத்த அளவுகள் உங்களுடைய நோய் எதிர்ப்பு அமைப்பை வலுவிழக்க செய்து, பூஞ்சை தொற்றுகளுக்கு எதிராக உங்கள் உடல் சண்டையிடுவதை தடுக்கிறது. இதன் விளைவாக பொடுகு பிரச்சனை ஏற்படுகிறது. எனவே தியானம், யோகா அல்லது ஆழ்ந்த மூச்சு பயிற்சி போன்ற மன அழுத்த குறைப்பு நுட்பங்களை உங்களுடைய அன்றாட வழக்கத்தில் சேர்த்து கொள்வது உங்களுடைய மயிர் கால்களின் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல உங்கள் மனநலனுக்கும் நல்லது. 

ஆப்பிள் சைடர் வினிகர் 

சமீப வருடங்களாக பல்வேறு விஷயங்களுக்கு ஒரு தீர்வாக அமையப்பெற்று பிரபலமடைந்து வரும் ஆப்பிள் சைடர் வினிகர் பொடுகு பிரச்சனைக்கும் ஒரு சிறந்த மருந்தாக திகழ்கிறது. இதில் உள்ள அசிடிட்டி பண்பு இறந்த சரும செல்களை அகற்றி மயிர்க்கால்களின் pH சமநிலையை பராமரிக்கிறது. இதனால் பூஞ்சை வளர்ச்சி தடுக்கப்படுகிறது. பொடுகு பிரச்சனையிலிருந்து தப்பிப்பதற்கு ஒரு சில டேபிள்ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை உங்களுடைய ஷாம்புவில் அல்லது தண்ணீரில் கலந்து பயன்படுத்தலாம்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • I trusted director Bala and went astray.. The actor has left cinema இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!