வறண்ட சருமமா… அப்படியென்றால் நீங்கள் ஏன் இதனை முயற்சி செய்து பார்க்கக் கூடாது?
Author: Hemalatha Ramkumar8 March 2023, 12:30 pm
வறண்ட சருமம் பொதுவாக நாம் சந்திக்கும் சரும பிரச்சனைகளில் ஒன்று என்றாலும் இது நமக்கு அதிக மன உளைச்சலை ஏற்படுத்தக் கூடும். ஆனால், வறண்ட சருமத்தை சரி செய்து சருமத்தின் ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்க பல வழிகள் உள்ளன. அவை:
முதலில் நாம் எளிதில் செய்யக் கூடியது ஆனால் பெரும்பாலும் நாம் செய்யத் தவற விடுவது போதுமான அளவு போதுமான அளவு தண்ணீர் குடிப்பதே ஆகும். சருமத்தை வறண்டு போகாமல் பாதுகாக்க நாம் தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
அது போல நாம் பின்பற்றத் தவறும் இன்னொரு விஷயம் மென்மையான சோப்களை பயன்படுத்துவது ஆகும். நம்மை ஈர்க்கும் விளம்பரங்களைப் பார்த்து அல்லது வாசனையால் ஈர்க்கப்பட்டு நாம் சோப்களை தேர்வு செய்வதில் அதிக கவனம் செலுத்துவது இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.வறண்ட சருமமா இருந்தால் வாசனை அற்ற ஜென்டில் ஆன சோப்களை மட்டுமே உபயோகிக்க வேண்டும்.
அடுத்து நாம் சூடான தண்ணீரில் குளிப்பதை வழக்கமாகக் கொண்டு இருந்தால், அதனை கண்டிப்பாக உடனே நிறுத்த வேண்டும். சூடான நீரில் குளித்து வந்தால், அது நம் சருமத்தில் உள்ள இயற்கையான எண்ணெய்களை இழக்கச் செய்து விடும். சூடான நீருக்கு பதில் எப்பொழுதுமே வெது வெதுப்பாக உள்ள தண்ணீரை மட்டுமே குளிப்பதற்கு பயன்படுத்த வேண்டும்.
அதே போல் மாய்ஸ்சரைசரை சரியான நேரத்தில் பயன்படுத்த வேண்டும். அதாவது குளித்த பிறகு உங்கள் சருமம் சற்று ஈரமாக இருக்கும் போதே, ஈரப்பதத்தைப் தக்க வைத்து கொள்தற்கு ரிச் ஆன கிரீமி ஆன மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்த வேண்டும்.
உங்களுக்கு பேஷியல் செய்து பழக்கம் இருந்தால், வறண்ட சருமத்திற்கு வாழைப் பழ பேஷியலை முயற்ச்சி செய்து பார்க்கலாம். இரண்டு வாழைப் பழங்களை எடுத்து அவற்றை ஒரு ஸ்பூன் கொண்டு நன்றாக மசித்து அதன் உடன் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் சேர்த்துகே கொள்ளவும். இந்தக் கலவையை உங்கள் வறண்ட முகத்தில் பூசி சுமார் 20 நிமிடங்கள் வரை காய விடவும். 20 நிமிடங்களுக்குப் பின்னர் குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை கழுவி விடுங்கள்.
இவற்றை செய்வது சுலபம் என்றாலும், நம் வாழ்க்கை முறை காரணமாக இதனை நாம் பின்பற்றத் தவறலாம். ஆனால், இதற்காக நேரம் ஒதுக்கி தவறாமல் பின்பற்றி வந்தால் கண்டிப்பாக நல்ல பலன் கிடைக்கும் என்பதை மனதில் வைத்து செயல்படுங்கள். எல்லாம் சாத்தியமாகும்!
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.