ஐந்து பைசா செலவில்லாமல் உங்கள் பற்களை முத்து போல ஜொலிக்க செய்வோமா…??

Author: Hemalatha Ramkumar
25 August 2022, 2:30 pm

சிலருக்கு, பல் நிறமாற்றம் பெரிய பிரச்சனைகளில் ஒன்றாகும். ஏனெனில் சிரித்து பேசும் போது அது சங்கடத்தை தரும். ஒரு சில காரணங்களால் பற்கள் கருமையாகலாம், வெள்ளை நிறத்தில் இருந்து வெவ்வேறு நிறங்களுக்கு மாறலாம் அல்லது ஒரு சில இடங்களில் வெள்ளை அல்லது கருமையான புள்ளிகளை உருவாக்கலாம். பற்களின் நிறமாற்றம் உங்களுக்கு ஒரு பெரிய பிரச்சனையாக இருந்தால், இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்து பார்க்கவும்.

எண்ணெய்: எள், தேங்காய் அல்லது ஆலிவ் எண்ணெய் போன்ற ஏதாவது ஒரு எண்ணெயில் ஒரு தேக்கரண்டி எடுத்து உங்கள் வாயில் 20 நிமிடங்கள் வரை கொப்பளிக்கவும். இது பாக்டீரியாவை வெளியேற்ற உதவும். தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவதால் பல் சொத்தையைத் தடுக்கலாம் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

பேக்கிங் சோடா: பேக்கிங் சோடா பற்களின் மேற்பரப்பில் உள்ள கறைகளை மெதுவாக மெருகூட்டுகிறது. பேக்கிங் சோடா மிகவும் கடுமையானது மற்றும் பற்சிப்பியை அழித்துவிடக்கூடும் என்று சிலர் கவலைப்படுகிறார்கள். ஆனால் கறைகளை அகற்ற இது ஒரு பாதுகாப்பான வழியாகும். பேக்கிங் சோடா பாக்டீரியாவை எதிர்த்துப் போராடவும் உதவும். இது பிளேக் குறைக்க மற்றும் பல் சிதைவைத் தடுக்கும் என்று கூறுகிறது.

எலுமிச்சை: வாழைப்பழம், ஆரஞ்சு அல்லது எலுமிச்சை தோலை எடுத்து உங்கள் பற்களில் மெதுவாக தேய்க்கவும். சுமார் 2 நிமிடங்கள் தேய்த்து, பின்னர் உங்கள் வாயை நன்கு கழுவி, பல் துலக்கவும். இந்த பழங்களின் தோல்களில் சிட்ரிக் அமிலம் உள்ளது. இது பற்களை வெண்மையாக்க உதவுகிறது.

மாலிக் அமிலம்: ஆப்பிள், அன்னாசி மற்றும் ஸ்ட்ராபெர்ரிகளில் மாலிக் அமிலம் உள்ளது. இது பற்களை வெண்மையாக்க உதவுகிறது. அன்னாசிப்பழத்தில் உள்ள ப்ரோமைலைன் என்ற கலவை, பற்களை வெண்மையாக்க உதவும். இவற்றின் கலவையைக் கொண்டு துலக்குவது வெண்மையாக்கும் விளைவைக் கொண்டிருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மஞ்சள்: மஞ்சள் பேஸ்ட் மஞ்சள் பற்களை மீண்டும் முத்து போல வெண்மையாக மாற்றும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இதை ஆதரிக்க உறுதியான ஆராய்ச்சி எதுவும் இல்லை.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 602

    0

    0