சருமத்திற்கு எப்போதும் கவனிப்பு தேவை என்றாலும், குறிப்பாக கோடை காலத்தில் அதற்கு ஸ்பெஷல் கவனிப்பு தேவை. தொப்பி அணிவது, சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துதல் மற்றும் நேரடி சூரிய ஒளியில் நீண்ட நேரம் வெளிப்படுவதைத் தவிர்ப்பது ஆகியவை சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கும் சில வழிகள் என்பதை நாம் அறிவோம். ஆனால் சில உணவுகளை சாப்பிடுவதும் உங்கள் சருமத்தைப் பாதுகாக்க மற்றும் அதனை ஆரோக்கியமாக வைக்க உதவும் என்பது பலருக்கு தெரியாது.
ஒரு சில உணவுகளில் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளன. அவை சூரிய ஒளியில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவும். தேங்காய் எண்ணெய், தக்காளி மற்றும் டார்க் சாக்லேட் போன்ற உணவுகள் அனைத்தும் ஆன்டிஆக்ஸிடன்ட்களின் சிறந்த ஆதாரங்கள் ஆகும். அவை சூரிய ஒளியில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவும்.
கேரட்டில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது சரும செல்களை சேதப்படுத்தும் மற்றும் சரும செல்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. வைட்டமின் ஏ கேரட்டில் உள்ளது. இது சருமத்தின் அமைப்பை மேம்படுத்தவும் சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.
உங்கள் சருமத்தை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கும் மற்றொரு சிறந்த உணவு தக்காளி. தக்காளியில் லைகோபீன் நிறைந்துள்ளது. இது சூரியனின் புற ஊதா கதிர்களால் சருமத்திற்கு ஏற்படும் சேதங்களில் இருந்து அதனை பாதுகாக்க உதவுகிறது. தக்காளி சாப்பிடுவது உங்கள் சருமத்தை சூரிய ஒளியில் இருந்தும், சரும பாதிப்பிலிருந்தும் காக்கிறது.
தேங்காய் எண்ணெயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அதே போல் கொழுப்பு அமிலங்கள் சருமத்திற்கு தேவையான நீர்ச்சத்து மற்றும் ஊட்டமளிக்க உதவும். சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களைத் தடுக்க தேங்காய் எண்ணெய் சருமத்தில் ஒரு பாதுகாப்புத் தடையை உருவாக்க உதவுவதால், நீங்கள் உங்கள் சருமத்தில் தேங்காய் எண்ணெயை நேரடியாக பயன்படுத்தலாம்.
டார்க் சாக்லேட் உங்களுக்கு பிடிக்குமா…? இனி அத ஜாலியா சாப்பிடலாம். ஆமாம், டார்க் சாக்லேட் உங்கள் சருமத்தை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. டார்க் சாக்லேட்டில் ஃபிளாவனால்கள் உள்ளன. இது புற ஊதா கதிர்வீச்சிலிருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது. டார்க் சாக்லேட் சாப்பிடுவது உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கவும் உதவும்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
திமுக அரசின் அவலங்களை எடுத்துரைக்கும் வகையில் அதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் சார்பில் தாம்பரத்தில் பொது கூட்டம் மற்றும் வீதி…
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
This website uses cookies.