வீட்டில் கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்தே ஃபேஷியல் செய்வது எப்படி…??

Author: Hemalatha Ramkumar
27 April 2022, 5:51 pm

வெயில் காலங்களில் நம்முடைய முகமானது பொலிவிழந்து விடுகிறது. நம்முடைய முகத்தை பொலிவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே நாம் இழந்த அழகை மீட்கலாம்.

கடலைமாவும், பயத்தமாவும்:
நம் வீட்டில் பயன்படுத்த கூடிய கடலைமாவு, பயத்தமாவு, கஸ்தூரி மஞ்சள் இந்த மூன்று பொருட்களும் நமது உடலுக்கும், சருமத்திற்கும் நன்மை தரக்கூடியவை.

ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொள்ளவும். பின்பு, கடலைமாவு, பயத்தமாவு, கஸ்தூரி மஞ்சள் ஒரு சிட்டிகை, தண்ணீர் சிறிதளவு கலந்து முகத்தில் பூசி கொள்ளவும். 1/2 மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். இந்த கலவையை குளிக்கும் போதும் சேர்த்து கொள்ளலாம்.

தயிரும், கடலைமாவும்:
முகத்தில் கரும்புள்ளிகள், தழும்புகள், கருமை நிறம் மறைய வேண்டுமா?
அதற்கு ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொள்ளவும். அதில் கடலைமாவு ஒரு ஸ்பூன், தயிர் ஒரு ஸ்பூன், எலுமிச்சை சாறு அரை ஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் ஒரு சிட்டிகை தண்ணீர் சிறிதளவு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

பிறகு, அந்த கலவையை முகத்தில் அப்ளை செய்யவும். சில நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். இப்படி செய்வதால் கரும்புள்ளிகள் மறைவதோடு முகம் பளபளப்பாகவும், பொலிவுடன் காணப்படும்.

சருமம் பொலிவுடன் இருக்க:
கடலைமாவும், முல்தானிமிட்டி ஆகிய இரண்டு பொருட்களும் சருமத்தில் உள்ள பல பிரச்சனைகளை தீர்ப்பதற்கு உதவும்.

ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொள்ளவும். பின்பு, அதில் கடலைமாவு ஒரு ஸ்பூன், முல்தானி மட்டி ஒரு ஸ்பூன், ரோஸ் வாட்டர் ஒரு ஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் ஒரு சிட்டிகை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

பின்பு, அந்த கலவையை முகத்தில் பேக் போல் அப்ளை செய்து கொள்ளவும். நன்கு காய்ந்தவுடன் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒரு முறை செய்து வந்தால் சருமத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் நீங்கி முகம் பளபளப்பாகவும் பொலிவுடனும் காணப்படும்.

இப்படி நம் வீட்டில் இருக்க கூடிய பொருட்களை வைத்தே நம் உடலையும், சருமத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 1843

    0

    0