பீட்ரூட் சாறு நம்முடைய சருமத்திற்கு சிறந்தது என்று நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசன் கூறியுள்ளது. பீட்ரூட்டில் ஆன்டி-ஆக்சிடன்ட் பண்புகள் இருப்பதால் இது ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்றி, சுருக்கங்கள் மற்றும் வயதான அறிகுறிகளை தாமதப்படுத்துகிறது. மேலும் பருக்கள் மற்றும் பிக்மென்டேஷன் பிரச்சனைகளை தவிர்க்கிறது. இந்த தீபாவளி பண்டிகைக்கு உங்களுடைய சருமத்திற்கு நேச்சுரல் குலோ தருவதற்கு ஆசையாக இருந்தால் இந்த பீட்ரூட் தயிர் ஃபேஸ் பேக்கை முயற்சி செய்து பாருங்கள்.
பீட்ரூட் மற்றும் தயிர் ஃபேஸ் பேக் ரெசிபி
பீட்ரூட்டில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் இருப்பதால் இது சருமம் தொடர்பான பல பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது. அதே நேரத்தில் தயிரில் சருமத்திற்கு தேவையான போஷாக்குகள் மற்றும் மேலும் சில பொருட்கள் இருப்பது சருமத்தை தெளிவாக்கி மென்மையாக்கும். இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து ஃபேஸ் பேக்காக பயன்படுத்தும் பொழுது நமக்கு நேச்சுரல் குலோ கிடைக்கும். ஆனால் இந்த ஃபேஸ் பேக்கை நீங்கள் உங்களுடைய அன்றாட சரும பராமரிப்பு வழக்கத்தில் சேர்க்க வேண்டும். அதனை எப்படி செய்யலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.
இதையும் படிக்கலாமே: தீபாவளி கொண்டாட்டத்துல உங்க நுரையீரல் ஆரோக்கியத்த மறந்துடாதீங்க!!!
முதலில் ஒரு பீட்ரூட்டை சிறிய கிண்ணத்தில் சீவி எடுத்துக் கொள்ளலாம். பிறகு அதனை சிறிய உரக்கல்லில் போட்டு இடித்து அதில் உள்ள சாற்றை தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். இந்த சாற்றில் 2 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்துக் கொள்ளவும். பொருட்கள் அனைத்தையும் நன்றாக கலந்து முகத்தில் சமமாக தடவுங்கள். 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவிக் கொள்ளவும். ஃபேஸ் பேக் மூலமாக நல்ல முடிவுகளைப் பெற இதனை வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரு முறை பயன்படுத்துங்கள்.
பீட்ரூட் மற்றும் தயிர் ஃபேஸ் பேக் மூலம் கிடைக்கும் நன்மைகள்
பீட்ரூட் மற்றும் தயிர் ஆகிய இரண்டுமே மினுமினுப்பான சருமத்தை வழங்கும் இயற்கையான பொருட்கள். பீட்ரூட்டில் உள்ள இயற்கையான ப்ளீச்சிங் பண்புகள் சருமத்தின் தொனியை மென்மையாக்கி டேனை குறைக்கிறது. பீட்ரூட் மூலமாக அதிகபட்ச பலன்களை பெறுவதற்கு அதனை நீங்கள் பல்வேறு ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்தலாம். அதே நேரத்தில் தயிரில் சருமத்தை ஆற்றும் பண்புகள் உள்ளன. இது தோலில் உள்ள இறந்த செல்களை அகற்றுகிறது. தயிரை ஃபேஸ் வாஷ் அல்லது கிளென்சராகவும் நீங்கள் பயன்படுத்தலாம்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.