இந்த மூன்று பொருட்கள் இருந்தால் போதும்… பாடி ஸ்க்ரப் தயார்!!!

Author: Hemalatha Ramkumar
14 June 2023, 6:42 pm

பாடி ஸ்க்ரப் என்பது கால்கள் மற்றும் தொடை பகுதியில் காணப்படும் வறட்சியான சருமத்தை போக்குவதற்கான சிறந்த வழியாகும். இது அங்குள்ள இறந்த சரும செல்களை நீக்குவது மட்டுமல்லாமல், சருமத்திற்கு தேவையான நீர்ச்சத்து மற்றும் போஷாக்கையும் அளிக்கிறது. இந்த ஸ்க்ரப்பில் நாம் பயன்படுத்தும் எண்ணெய் மற்றும் வெண்ணெய் சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்து மற்றும் நீர்ச்சத்தை அளித்து அதனை மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற்றுகிறது.

இந்த ஸ்க்ரப் செய்வதற்கு நமக்கு மூன்றில் ஒரு பங்கு சர்க்கரை, 1/4 பங்கு தேங்காய் எண்ணெய் மற்றும் ஓரிரு துளிகள் அத்தியாவசிய எண்ணெய் தேவைப்படும். முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து குறைந்த தீயில் அதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து அதனை உருக வைக்கவும்.

தேங்காய் எண்ணெய் உருகியதும் அதில் சர்க்கரை சேர்த்து, இரண்டு பொருட்களும் நன்றாக கலக்கும் படி கிளறிக் கொண்டே இருக்கவும். அடுப்பில் இருந்து கடாயை எடுத்து கடைசியாக உங்களுக்கு விருப்பமான அத்தியாவசிய எண்ணெய் சேர்க்கவும். இதனை ஒரு சுத்தமான காற்று உள்ளே செல்ல இயலாத ஒரு டப்பாவில் ஊற்றி வைத்துக் கொள்ளவும்.

தேவைப்படும் பொழுது கைகளில் சிறிதளவு எடுத்து இரண்டு கைகளையும் நன்றாக தேய்த்து அதனை உங்கள் கால்கள் மற்றும் தொடை பகுதியில் தடவவும். ஸ்க்ரப்பை பயன்படுத்தும் பொழுது வட்ட இயக்கங்களில் அதனை தடவுங்கள். இறுதியாக வெதுவெதுப்பான தண்ணீர் கொண்டு கால்களை கழுவிக் கொள்ளவும். நல்ல முடிவுகளை பெற இதனை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 2761

    0

    0