3 வாரம் மட்டும் இந்த ஹேர் ஆயில் யூஸ் பண்ணுங்க… ரிசல்ட் பார்த்து நீங்களே வாயடைத்து போய்டுவீங்க!!!

Author: Hemalatha Ramkumar
1 October 2024, 10:57 am

உங்களுடைய தலைமுடி பிரச்சனைகளை போக்கி இயற்கையான முறையில் முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும் இரண்டு பாரம்பரிய ரகசிய பொருட்கள் கறிவேப்பிலை மற்றும் வெந்தய விதைகள். பல நூற்றாண்டுகளாக இந்த இரண்டு பொருட்களும் தலைமுடியின் வலிமை, நீளம் மற்றும் அதன் பளபளப்புக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவை இரண்டையும் பயன்படுத்தி ஹேர் ஆயில் ஒன்று எப்படி செய்வது, அதனை உபயோகிப்பது எப்படி மற்றும் அதன் பலன்கள் யாவை என்பதை இப்போது பார்க்கலாம். 

கறிவேப்பிலை மற்றும் வெந்தய விதைகள் எண்ணெய் செய்வது எப்படி? 

முதலில் ஒரு கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தய விதைகள் மற்றும் 10 கறிவேப்பிலைகளை  எண்ணெய் ஊற்றாமல் ட்ரை ரோஸ்ட் செய்து கொள்ளவும். பின்னர் வறுத்த பொருட்களை மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைக்கவும். அதன் பிறகு அதே கடாயை அடுப்பில் வைத்து 1/2 கப் அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றவும். 

தேங்காய் எண்ணெய் 2 நிமிடங்கள் கொதித்த பிறகு நாம் அரைத்து வைத்த வெந்தய விதை மற்றும் கறிவேப்பிலை பொடியை சேர்க்கவும். கறிவேப்பிலை மற்றும் வெந்தய விதைகள் எண்ணெயில் நன்றாக ஊரும் வரை காத்திருக்கவும். இதற்கு நீங்கள் கடாயை மூடி ஒன்று போட்டு மூடி சிறிது நேரம் வைத்திருக்கலாம். பிறகு எண்ணெயை வடிகட்டி பாட்டில் ஒன்றில் ஊற்றவும். 

இதனை வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை உங்களுடைய மயிர்கால்கள் மற்றும் தலைமுடியில் தடவி மசாஜ்  செய்யவும். உங்களுடைய தலைமுடிக்கு எண்ணெய் தடவிய பின் வெதுவெதுப்பான துண்டு ஒன்றை தலை மீது போர்த்திக் கொள்ளவும். இதனை 15 முதல் 20 நிமிடங்கள் அப்படியே விடவும். பின்னர் துண்டை எடுத்துவிட்டு தலை முடியை ஒரு மணி நேரத்திற்குள்ளாக அலசவும்.  

கறிவேப்பிலை மற்றும் வெந்தய விதைகள் எண்ணெய் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் 

கறிவேப்பிலை மற்றும் வெந்தய விதைகள் ஆகிய இரண்டிலுமே ப்ரோட்டீன் அதிகமாக இருப்பதால் இது தலைமுடியை வலிமையாக்கவும், தலைமுடி பிரச்சனையை முழுவதுமாக அகற்றவும் உதவுகிறது. வெந்தய விதைகளில் உள்ள இரும்புச்சத்து தலைமுடிக்கு அத்தியாவசியமான ஒரு ஊட்டச்சத்தாக அமைகிறது. அதே நேரத்தில் கறிவேப்பிலையில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களை சமநிலையாக்கி உங்களுடைய தலைமுடியை ஆரோக்கியமாக மாற்றுகிறது. இந்த எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் உங்களுடைய முடி நீளமாகவும், வலுவாகவும், அதே நேரத்தில் பளபளப்பாகவும் இருக்கும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • ajith praise adhik ravichandran after watching good bad ugly movie என்னைய இப்படி காமிச்சிருக்கியேடா- ஆதிக் ரவிச்சந்திரனிடம் அஜித் சொன்ன GBU விமர்சனம்?