ஒரு தக்காளி இருந்தா போதும்… பார்லர் போகாமலே கல்யாணத்திற்கே ரெடி ஆகிவிடலாம்!!!
Author: Hemalatha Ramkumar17 June 2023, 10:53 am
வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்து சருமத்தை பராமரிக்க விரும்புபவர்களுக்கு தக்காளி ஒரு சிறந்த ஆப்ஷன். சரும பராமரிப்பில் தக்காளி ஒரு மேஜிக் போல செயல்படக்கூடிய பல பண்புகளை உள்ளடக்கியுள்ளது. வீக்கம் மற்றும் பருக்களை குறைக்கக்கூடிய லைக்கோபின் என்ற ஆன்டி-ஆக்சிடன்ட் தக்காளியில் காணப்படுகிறது. இதைத்தவிர தக்காளியில் உள்ள அமிலத்தன்மை சருமத்தில் உள்ள pH அளவை சமன் செய்ய உதவுகிறது. இந்த பதிவில் தக்காளியை பயன்படுத்தி ஒரு சில ஃபேஷியல் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
தக்காளி மற்றும் தேன் ஃபேஸ் மாஸ்க்:
இந்த ஃபேஸ் மாஸ்க் செய்வதற்கு நமக்கு ஒரு பழுத்த தக்காளி, ஒரு டேபிள் ஸ்பூன் தேன் ஆகியவை தேவைப்படும். முதலில் தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கி பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும். இதில் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து இரண்டையும் பேஸ்டாக கலந்து கொள்ளவும். இதனை சருமத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் அப்படியே விடவும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி இயற்கையாக உலர விடவும்.
தக்காளி மற்றும் கற்றாழை ஃபேஸ் மாஸ்க்:
இதனை செய்வதற்கு நமக்கு ஒரு பழுத்த தக்காளி மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் தேவைப்படும். தக்காளியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி பேஸ்டாக அரைத்துக் கொள்ளுங்கள். இதனோடு ஒரு டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் தடவி கட்டிகள் இல்லாதவாறு இரண்டையும் நன்றாக கலந்து முகத்தில் தடவும். இதனை 15 முதல் 20 நிமிடங்கள் உலர விட்டு பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவும்.
தக்காளி மற்றும் எலுமிச்சை சாறு ஃபேஸ் மாஸ்க்:
இந்த ஃபேஸ் மாஸ்க் செய்வதற்கு ஒரு பழுத்த தக்காளியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி பேஸ்ட்டாக அரைக்கவும். இதனோடு ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து முகத்தில் தடவவும். 15 முதல் 20 நிமிடங்கள் உலர விட்டு முகத்தை கழுவிக் கொள்ளலாம்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.