ஒரே வாரத்தில் சருமத்தில் உள்ள வடுக்களை போக்கும் ஹோம்மேட் ஃபேஸ் ஜெல்!!! 

Author: Hemalatha Ramkumar
26 September 2024, 10:40 am

உங்களுக்கு சன்பர்ன் இருந்தாலும் சரி அல்லது நாள் முழுவதும் மாசுபாட்டை சமாளித்துவிட்டு சோர்வாக வீடு திரும்பினாலும் சரி ஃபேஸ் ஜெல் பயன்படுத்துவது உங்கள் சருமத்தில் ஒரு மாயாஜாலம் போட செயல்படுகிறது. தண்ணீர் அடிப்படையிலான இந்த ஃபேஸ் ஜெல் உங்கள் சருமத்தை ஆற்றி அதற்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. இது எல்லா வகை சருமத்திற்கும் ஏற்றது என்பதே இதன் சிறப்பு விஷயமாக அமைகிறது. மார்க்கெட்டில் வெவ்வேறு வகையிலான ஃபேஸ் ஜெல்கள் விற்பனை செய்யப்பட்டாலும் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி நாம் செய்யக்கூடிய ஃபேஸ் ஜெல் எந்த ஒரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. எனவே எளிமையான வழியில் வீட்டில் ஃபேஸ் ஜெல் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம். 

ஃபேஸ் ஜெல் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் வறண்ட சருமத்தை மாய்சரைஸ் செய்து அதற்கு தேவையான போஷாக்கை வழங்குகிறது. 

சருமத்தின் அதிகப்படியான எண்ணெயை அகற்றுகிறது. 

கோடை காலத்திற்கு ஏற்றது. 

சருமத்தை மென்மையாக்குவதன் மூலமாக அதன் அமைப்பை மேம்படுத்துகிறது. 

ஒரு சில ஃபேஸ் ஜெல்களில் இருக்கும் வீக்க எதிர்ப்பு பண்புகள் சேதமடைந்த சருமத்தை ஆற்றுகிறது. 

சுருக்கங்கள், சன்பர்ன் மற்றும் வடுக்களை குறைக்கிறது. 

வீட்டில் ஃபேஸ் ஜெல் தயாரிப்பது எப்படி? 

கற்றாழை சாறு, ரோஸ் வாட்டர், வெள்ளரிக்காய் மற்றும் வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். 

முதலில் கற்றாழைச் செடியிலிருந்து ஒரு மடலை பறித்து அதனை சுத்தமாக கழுவி அதில் உள்ள ஜெல்லை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 

அதே சமயத்தில் வெள்ளரிக்காயை தோல் சீவி அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் அரைத்து வடிகட்டி சாற்றை எடுத்துக் கொள்ளலாம். 

இப்போது கற்றாழை எடுத்து வைத்துள்ள கிண்ணத்தில் வெள்ளரிக்காய் சாற்றை சேர்த்து இதனுடன் 2 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் சேர்த்துக் கொள்ளவும். 

அனைத்து பொருட்களையும் நன்றாக கலந்து கொள்ளவும். 

இந்த ஜெல்லை ஒரு கண்ணாடி பாட்டிலில் மாற்றவும். 

இதனை குறைந்தபட்சம் 24 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். 

இப்போது உங்களுடைய ஃபேஸ் ஜெல் பயன்படுத்துவதற்கு தயாராக உள்ளது. 

ஃபேஸ் ஜெல்லை பயன்படுத்துவது எப்படி?

ஃபேஸ் ஜெல்லில் வீக்க எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் இதனை நீங்கள் ஒரு நாளின் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

மேலும் உங்களுடைய முகத்தை சுத்தம் செய்துவிட்டு உங்களின் அடிப்படை சரும பராமரிப்பு வழக்கத்தில் சேர்க்கலாம். 

படுக்கைக்கு செல்வதற்கு முன்பு இதனை பயன்படுத்தலாம். 

இரவு உங்கள் சருமத்தில் இந்த ஃபேஸ் ஜெல்லை பயன்படுத்திவிட்டு தூங்கும் பொழுது அது சருமத்தில் உள்ள சேதங்களை சரி செய்து அடுத்த நாள் காலை உங்கள் சருமம் மென்மையாக இருப்பதை உறுதி செய்கிறது. 

வீட்டில் இந்த ஃபேஸ் ஜெல் செய்வதற்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ள படிப்படியான வழிகாட்டுதலை பின்பற்றவும். எனினும் இந்த பொருட்கள் ஏதேனும் உங்களுக்கு அலர்ஜியை ஏற்படுத்தும் என்றால் அவற்றை நீங்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும். ஒருவேளை ஃபிரஷான கற்றாழை சாறு உங்கள் சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்துமாயின் கடைகளில் விற்பனை செய்யப்படும் கற்றாழை ஜெல்லை பயன்படுத்தலாம்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • NAYANTHARA ABOUT DOCU ISSUE உங்கள் கணவர் செய்தது மட்டும் நியாயமா? நயன்தாராவுக்கு எஸ்.எஸ்.குமரன் கேள்வி!
  • Views: - 255

    0

    0