உங்க தலைமுடி ரொம்ப டல்லா இருக்கா… ஆளி விதை ஹேர் மாஸ்க் அப்ளை பண்ணுங்க… நல்ல ரிசல்ட் கிடைக்கும்!!!

Author: Hemalatha Ramkumar
7 September 2024, 1:51 pm

உலகின் குளுமையான பகுதிகளில் பயிரிடப்படும் ஆளிவிதை நீண்ட நாட்களாக ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த விதைகள் நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை அளிக்கிறது. ஆனால் அது தவிர இது நம்முடைய சரும மற்றும் தலைமுடிக்கும் பல்வேறு பலன்களை வழங்க வல்லது. இந்த சூப்பர் ஃபுட் பற்றிய எக்கச்சக்கமான நல்ல விஷயங்களை பல அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகின்றனர். எனவே நம்முடைய தலைமுடிக்கு இந்த ஆளி விதைகள் வழங்கும் சில நன்மைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தலை முடிக்கு ஆளி விதை வழங்கும் நன்மைகள்
ஆளி விதைகள் பல ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக திகழ்கிறது. அதிலும் குறிப்பாக வைட்டமின் ஈ சத்து இதில் அதிகமாகவே உள்ளது. வைட்டமின் இ என்பது மயிர்க்கால்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம். இந்த வைட்டமின் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி தலைமுடியை வலுவானதாக மாற்றி, தலைமுடி உதிர்தலை குறைக்கிறது. மேலும் ஆளி விதையில் அதிகம் காணப்படும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் சரும மற்றும் தலைமுடிக்கு போஷாக்கு வழங்குகிறது.

ஒமேகா-3 கொழுப்பு அமிலம் தலைமுடி மற்றும் மயிர் கால்களில் உள்ள ஈரப்பதத்தை தக்க வைப்பதற்கு உதவுகிறது. மேலும் உலர்ந்த தலைமுடி பிரச்சனையை சரி செய்து தலைமுடி உதிர்தல் மற்றும் மெலிந்து போதல், பொடுகு பிரச்சனையில் இருந்து விடுபட உதவுகிறது. தலைமுடியின் நெகிழ்வுத் தன்மையை மேம்படுத்துவதன் மூலமாக எளிதாக உடைந்து போகும் தலைமுடி பிரச்சனையை சீர் செய்கிறது.

ஆளி விதைகளில் உள்ள வைட்டமின் பி, மெக்னீசியம், செலினியம், காப்பர் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் மயிர்கால்கள் மற்றும் தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இப்போது சேதமடைந்த மற்றும் பொலிவிழந்த தலைமுடியை மீட்டெடுக்க உதவும் ஆளி விதை ஹேர் மாஸ்க் எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

1/4 கப் ஆளி விதைகளோடு 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். உங்களுடைய தலைமுடியின் நீளத்திற்கு தகுந்தார் போல இந்த அளவை நீங்கள் அதிகரித்து கொள்ளலாம். இந்த கலவையை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். கலவையில் நுரை பொங்க ஆரம்பித்தவுடன் அது க
தடினமானதாக மாறும். இப்போது இந்த கலவையை வடிகட்டி ஆற வைக்கவும்.

பின்னர் இதில் ஒரு பகுதியை மட்டும் எடுத்து வைத்து விட்டு மீதம் இருக்கக்கூடியவற்றை ஃப்ரிட்ஜில் வைக்கவும். இப்போது வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெய் மற்றும் லாவண்டர் எண்ணெயை தயாரித்து வைத்த கலவையில் சேர்த்து உங்களுடைய தலைமுடியில் தடவவும்.

இதனை 2 முதல் 3 மணி நேரத்திற்கு அப்படியே விட்டுவிடுங்கள். பின்னர் மைல்டான ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் பயன்படுத்தி தலை முடியை அலசவும். இப்போது உங்களுடைய சூப்பரான அழகான தலைமுடியை கொண்டாடுங்கள்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 279

    0

    0