இயற்கை சன்ஸ்கிரீன் கிரீம் வீட்டிலே செய்வது எப்படி???

Author: Hemalatha Ramkumar
3 June 2023, 7:21 pm

கோடை காலத்தில் சன்ஸ்கிரீன் இல்லாமல் வெளியே செல்வதை நினைத்து கூட பார்க்க இயலாது. சூரியனில் இருந்து வரும் தீங்கு விளைவிக்க கூடிய கதர்களிடமிருந்து சன்ஸ்கிரீன் நமது சருமத்தை பாதுகாக்க உதவுகிறது. அத்தகைய சன்ஸ்கிரீனை நாம் வீட்டிலேயே செய்து கூட பயன்படுத்தலாம். சூரிய கதிர்களிடமிருந்து பாதுகாப்பு வழங்கக்கூடிய பொருட்களை சேர்த்து நாம் எப்படி இயற்கை சான்ஸ்கிரீன் கிரீம் தயாரிப்பது என்பதை இப்போது பார்க்கலாம்.

இந்த சன்ஸ்கிரீன் செய்வதற்கு நமக்கு 1/4 கப் தேங்காய் எண்ணெய், 1/4 கப் சியா வெண்ணெய், இரண்டு டேபிள்ஸ்பூன் சின்க் ஆக்சைடு பவுடர், ஒரு டேபிள் ஸ்பூன் பீஸ்வேக்ஸ் பெல்லெட்டுகள் மற்றும் உங்களுக்கு தேவைப்பட்டால் வாசனைக்காக உங்களுக்கு விருப்பமான அத்தியாவசிய எண்ணெயில் 10 துளிகள் சேர்த்துக் கொள்ளலாம்.

இப்போது இந்த சன்ஸ்கிரீன் கிரீமை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம். இதனை நாம் டபுள் பாய்லர் முறையை பயன்படுத்தி செய்ய வேண்டும். அதாவது அடுப்பில் ஒரு அடி கனமான பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அதன் மீது ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தேங்காய் எண்ணெய், ஷியா வெண்ணெய் மற்றும் பீஸ்வேக்ஸ் பெல்லெட்டுகள் போன்றவற்றை சேர்க்கவும்.

அவை முழுவதுமாக உருகியதும் அடுப்பை அணைத்துவிட்டு அவற்றை ஆற வைக்கவும். பின்னர் அதில் சின்க் ஆக்சைடு பவுடர் சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த பவுடர் முழுவதுமாக கரைவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த சமயத்தில் உங்களுக்கு தேவைப்பட்டால் அத்தியாவசிய எண்ணெயில் 10 துளிகளை சேர்த்துக் கொள்ளலாம்.

இப்பொழுது நாம் தயாரித்த இந்த கலவையை ஒரு சுத்தமான காற்று உள்ளே செல்ல இயலாத ஒரு ஜாரில் சேமித்து வையுங்கள். முடிந்த அளவு இதனை வெளிச்சம் உள்ளே செல்ல இயலாத ஒரு கண்டைனரில் சேமிக்கவும். இந்த கலவை நன்றாக ஆறிய பின்னரே பயன்படுத்த வேண்டும்.

இந்த இயற்கை சன்ஸ்கிரீனை இப்பொழுது எப்படி பயன்படுத்துவது என்பதை தெரிந்து கொள்ளலாம். போதுமான அளவு சன்ஸ்கிரீனை கைகளில் எடுத்து வெயிலுக்கு வெளிப்படுத்தக்கூடிய பகுதிகளில் தாராளமாக தடவவும். ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் இதனை பயன்படுத்தவும்.

இது கடைகளில் விற்கப்படும் பொருட்களை காட்டிலும் குறைந்த SPF கொண்டதாக இருக்கும். மேலும் இந்த ஹோம் மேட் சன்ஸ்கிரீனை பயன்படுத்தும் முன்பு ஒரு பேட்ச் டெஸ்ட் செய்வது அவசியம்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…