காஸ்ட்லி கிரீம் வேண்டாம்… இனி இந்த வீட்டில் செய்யப்பட்ட DIY நைட் கிரீம் யூஸ் பண்ணி பாருங்க… அசந்து போய்டுவீங்க!!!

Author: Hemalatha Ramkumar
21 September 2022, 6:24 pm

நீங்கள் தூங்கும் முன் தோல், முடி மற்றும் பாதங்களை கவனித்துக் கொள்வது ஒரு நல்ல ஆரோக்கிய பழக்கம். சருமத்திற்கு வரும்போது, ​​அதற்கு கூடுதல் கவனம் தேவை என்று சொல்லலாம். இளமைப் பொலிவை உறுதிப்படுத்த சிறப்பான AM-PM வழக்கம் இதில் அடங்கும். ஆகவே இரவில் உங்கள் சருமத்திற்கு பயன்படுத்த வீட்டில் தயாரிக்கப்பட்ட நைட் க்ரீம் பற்றி இப்போது தெரிந்து கொள்ளலாம்!

வாருங்கள், வீட்டில் நைட் க்ரீம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்:-
கற்றாழை ஜெல் நைட் கிரீம்:
இது உங்கள் சருமத்தில் உள்ள கறைகளை குறைக்க உதவும். இந்த க்ரீமில் ரோஸ் வாட்டர் இருப்பதால் உங்கள் சருமத்திற்கு பளபளப்பு கூடும்.

இந்த க்ரீமைப் பயன்படுத்துவதற்கான சிறந்த வழி, இரவில் உங்கள் முகத்தைக் கழுவிய பின் அதனைப் பயன்படுத்த வேண்டும். நைட் க்ரீமை சிறிதளவு எடுத்து வட்ட இயக்கத்தில் குறைந்தது 2 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும்.

தேவையானவை:
கற்றாழை ஜெல் – 2 முதல் 3 தேக்கரண்டி
ரோஸ் வாட்டர் – 1 முதல் 2 தேக்கரண்டி
பாதாம் எண்ணெய் – 1 தேக்கரண்டி
லாவெண்டர் எண்ணெய் – 7-8 சொட்டுகள்

முறை:
* ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் கற்றாழை ஜெல் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்க்கவும்.
* அதில் ஒரு டீஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் சில துளிகள் லாவெண்டர் எண்ணெய் சேர்க்கவும். பொருட்கள் அனைத்தையும் நன்றாக கலக்குங்கள்.
* உங்கள் நைட் கிரீம் இப்போது தயார்!
* இதை ஒரு பாட்டிலில் சேமித்து குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்!

ரோஸ் வாட்டர் மற்றும் கோகோ பட்டர் நைட் கிரீம்
ரோஸ் வாட்டரின் இயற்கையான டோனிங் பண்புகள் காரணமாக இது சருமத்திற்கு புத்துணர்ச்சியூட்டுகிறது. ​​இந்த நைட் கிரீம் உங்கள் சருமத்திற்கு சரியான நீரேற்றம் கொடுக்கும்.

இந்த நைட் கிரீம் பாதாம் எண்ணெயின் நன்மையுடன் வருகிறது. இது கரும்புள்ளிகளைக் குறைக்கும். உங்களுக்கு வறண்ட சருமம் இருந்தால், இதைப் பயன்படுத்துங்கள்!

தேவையானவை:
கோகோ வெண்ணெய் – 2 டீஸ்பூன்
ரோஸ் வாட்டர் – 2 முதல் 3 தேக்கரண்டி
தேன் – 1 டீஸ்பூன்
பாதாம் எண்ணெய்- 1 தேக்கரண்டி

முறை:
* ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் கோகோ பட்டர் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்து குறைந்த தீயில் சூடாக்கவும்.
* கலவையை ஆறவைக்கவும்.
* ஆறியதும் தேன் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்க்கவும்.
* இதனை ஒரு பாட்டிலில் சேமித்து வையுங்கள்.

நீங்கள் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துவதைப் போலவே, நீங்கள் தூங்குவதற்கு முன் உங்கள் முகத்தைக் கழுவி உலர்த்திய பின் இதைப் பயன்படுத்துங்கள்!

  • nayanthara Happy children’s day…. குழந்தைகளுடன் கொண்டாடிய விக்கி – நயன் தம்பதி – கியூட் கிளிக்ஸ் வைரல்!
  • Views: - 862

    0

    0