ரோஜா இதழ்கள் போன்ற மென்மையான சருமத்திற்கு அரிசி மாவு ஃபேஸ் பேக்!!!
Author: Hemalatha Ramkumar3 October 2024, 11:21 am
முகத்தில் அரிசி தண்ணீரை ஸ்பிரே செய்வது மற்றும் அதனை ஃபேஸ் பேக்காக முகத்தில் பயன்படுத்துவது போன்ற அரசி அடிப்படையிலான அழகுப்படுத்தும் நுட்பங்கள் சமீப சில காலமாக பிரபலமடைந்து வருகிறது. அரிசியானது சருமத்தை சுத்தம் செய்து, அதற்கு தேவையான ஈரப்பதத்தை வழங்குகிறது. சென்சிட்டிவ் சருமம் கொண்ட நபர்களுக்கு அரிசி மாவு ஸ்க்ரப் பயன்படுத்துவது சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி அதனை பளபளப்பாக மாற்றுவதற்கு உதவுகிறது. ஒருவேளை நீங்கள் எண்ணெய் மிகுந்த சருமம் மற்றும் முகப்பருக்களால் அவதிப்பட்டு வருகிறீர்களானால் அரிசி மாவை பயன்படுத்தி வீட்டில் இருந்தே செய்யக்கூடிய ஒரு சில ஃபேஸ் ஸ்க்ரப்புகளை பற்றி பார்க்கலாம். இது உங்களுடைய அனைத்து விதமான சரும பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும்.
அரிசி மாவு மற்றும் கற்றாழை
ஒரு டீஸ்பூன் அரிசி மாவுடன் ஒரு டீஸ்பூன் கற்றாழை மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் ஆகியவற்றை கலந்து ஒரு ஃபேஸ் மாஸ்கை தயாரித்து பயன்படுத்துவது உங்கள் சருமத்திற்கு தேவையான அனைத்து போஷாக்கையும் அளிக்கிறது. இதனை உங்கள் முகத்தில் தடவி பொறுமையாக வட்ட இயக்கங்களில் மசாஜ் செய்து 2-3 நிமிடங்கள் மசாஜ் செய்யும் பொழுது அது சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றுகிறது. பின்னர் இதனை 10 – 15 நிமிடங்கள் உலர வைத்து பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவுங்கள். அதன் பிறகு உங்களுக்கு விருப்பமான மாய்சரைசரை பயன்படுத்துங்கள்.
அரிசி மாவு, ஓட்ஸ், தேன் மற்றும் பால்
அரிசி மாவுடன் ஓட்ஸ், தேன் மற்றும் பால் ஆகியவற்றை தலா ஒரு டீஸ்பூன் எடுத்து மென்மையான பேஸ்டாக கலந்து கொள்ளவும். இதனை முகத்தில் தடவி பொறுமையாக மசாஜ் செய்யவும். பின்னர் 10 முதல் 15 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவினால் உங்களுக்கு மென்மையான சருமம் கிடைக்கும்.
அரிசி மாவு மற்றும் தேன்
1/2 டீஸ்பூன் தேனுடன் ஒரு டீஸ்பூன் அரிசி மாவை கலந்து அற்புதமான எக்ஃபோலியேட்டிங் ஃபேஸ் மாஸ்க்கை உங்களால் தயாரிக்க முடியும். இந்த கலவை அதிக தடிமனாக இருந்தால் ஒரு சில துளிகள் பால் சேர்த்துக் கொள்ளலாம். இதனை முகத்தில் தடவி ஒரு நிமிடத்திற்கு மசாஜ் செய்யுங்கள். பின்னர் 2 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு முகத்தை கழுவவும். இது சருமத்திற்கு பளபளப்பு மற்றும் மென்மையை தருகிறது.
அரிசி மாவு மற்றும் தண்ணீர்
அரிசி மாவை வெறும் தண்ணீரில் கலந்து முகத்தில் ஸ்க்ரப் ஆக நீங்கள் பயன்படுத்தலாம். இது சருமத்தில் உள்ள குறைபாடுகளை சரி செய்து, அதனை மென்மையாக மாற்றுகிறது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.