DIY கறிவேப்பிலை ஹேர் சீரம்: இத வாரம் இரண்டு முறை யூஸ் பண்ணுங்க… ஹேர்ஃபால் பிரச்சினை உங்க கிட்ட கூட வராது!!!

Author: Hemalatha Ramkumar
18 September 2024, 12:32 pm

கறிவேப்பிலை என்றாலே நமக்கு முதலில் ஞாபகத்திற்கு வருவது தலைமுடி ஆரோக்கியம் தான். கறிவேப்பிலை பழங்காலத்திலிருந்து ஆரோக்கியமான மற்றும் வலிமையான தலைமுடிக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. கறிவேப்பிலையில் வைட்டமின் C, வைட்டமின் B, புரோட்டீன்கள் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் போன்ற தலைமுடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் அத்தனை ஊட்டச்சத்துகளும் உள்ளது. அது மட்டும் அல்லாமல் இது மயிர்க்கால்களின் ஆரோக்கியத்தையும் ஊக்குவிக்கிறது. 

ஒருவேளை நீங்கள் தலைமுடி உதிர்வு, பொடுகு, தலைமுடி மெலிந்து போதல் அல்லது எந்த விதமான தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து வந்தாலும் சரி கறிவேப்பிலை உங்களுக்கு நிச்சயமாக உதவும். எனவே கறிவேப்பிலையை பயன்படுத்தி ஹேர் சீரம் ஒன்று எப்படி தயார் செய்வது என்பதை இப்போது பார்க்கலாம். 

DIY கறிவேப்பிலை ஹேர் சீரம் ரெசிபி 

ஒரு சில கொத்து கறிவேப்பிலையை எடுத்து அதனை ஓடும் தண்ணீரில் சுத்தமாக கழுவி எடுத்துக் கொள்ளவும். ஒரு சில நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைத்து எடுத்தாலும் சரி. ஆனால் கறிவேப்பிலையை நீங்கள் சுத்தமாக கழுவி உள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். 

இப்போது ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் கறிவேப்பிலையை சேர்க்கவும். 

இதனோடு சிறிதளவு நறுக்கிய இஞ்சி மற்றும் ஒரு சிறிய டம்ளர் தண்ணீர் ஊற்றி அனைத்து பொருட்களையும் கெட்டியான பேஸ்டாக  அரைத்துக் கொள்ளவும். 

இப்போது இதனை மற்றொரு கிண்ணத்தில் வடிகட்டுங்கள். இதனோடு இரண்டு வைட்டமின் E கேப்ஸ்யூல் மற்றும் அரை மூடி எலுமிச்சை சாற்றை விடவும்.

அனைத்து பொருட்களையும் நன்றாக கலக்கவும். இப்போது இந்த கலவையை ஒரு ஸ்ப்ரே பாட்டிலுக்கு மாற்றவும். 

உங்களுடைய கறிவேப்பிலை சீரம் பயன்படுத்துவதற்கு இப்போது தயாராக உள்ளது. இதனை ஃபிரிட்ஜில் இரண்டு வாரங்கள் வரை சேமிக்கலாம். 

கறிவேப்பிலை ஹேர் சீரம் தலைமுடிக்கு பயன்படுத்துவது எப்படி? 

ஹேர் சீரமை நேரடியாக உங்களுடைய மயிர் கால்களில் ஸ்பிரே செய்யலாம் அல்லது ஒரு காட்டன் பந்தில் சீரமை முக்கி எடுத்து உங்களுடைய மயிர்கால்களில் தடவலாம். 

தடவிய பிறகு பொறுமையாக மயிர்க்கால்களை மசாஜ் செய்யுங்கள். 

பின்னர் ஒரு மணி நேரம் அதனை ஊற வைத்து தலைமுடியை அலசவும். 

இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை அல்லது இருமுறை செய்து வந்தால் உங்களுடைய தலைமுடி பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். 

இந்த ஹேர் சீரம் பயன்படுத்த ஆரம்பித்த 30 முதல் 45 நாட்களில் நல்ல மாற்றத்தை காண்பீர்கள்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 347

    0

    0