வீட்டில எப்பவும் இருக்கும் இந்த பொருட்கள வைத்தே சூப்பரான ஃபேஷியல் ஸ்க்ரப் ரெடி பண்ணிடலாம்!!!

Author: Hemalatha Ramkumar
28 October 2024, 12:11 pm

நம்முடைய சரும பராமரிப்பு வழக்கத்தில் கட்டாயமாக எக்ஸ்ஃபோலியேஷன் என்பது இருக்க வேண்டும். சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்ற உதவும் இதன் மூலமாக பொலிவிழந்து காணப்படும் உங்களுடைய சருமம் மினுமினுப்பாக மாறும். ஆனால் இதற்காக நீங்கள் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் காஸ்ட்லியான ஸ்க்ரப்புகளை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்கள் வீட்டில் உள்ள ஒரு சில பொருட்களை வைத்து ஸ்க்ரப் தயார் செய்து அதனை பயன்படுத்தினாலே போதுமானது. நம் சமையலறையில் இருக்கும் பொருட்கள் எந்த ஒரு கெமிக்கல் இல்லாமல், இயற்கையான ஒன்றாக அமைவதால் இது நம்முடைய சருமத்தில் பல அதிசயங்களை நிகழ்த்துகிறது. இப்போது சமையலறையில் உள்ள பொருட்களை வைத்து ஹோம்மேட் ஸ்க்ரப் எப்படி தயார் செய்வது என்று பார்க்கலாம்.

வாழைப்பழம், தேன் மற்றும் காபி ஃபேஷியல் ஸ்க்ரப் 

இந்த மூன்று பொருட்களிலுமே நம்முடைய சருமத்திற்கு தேவையான போஷாக்கு அனைத்தும் அடங்கியுள்ளது. இந்த ஸ்க்ரப்பை செய்வதற்கு ஒரு பழுத்த வாழைப்பழத்தை கூழாக்கி, அதனோடு 2 டேபிள் ஸ்பூன் காபி பொடி மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலக்கவும். திக்கான பேஸ்ட்டாக தயார் செய்து அதனை முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்யுங்கள். 20 நிமிடங்கள் காத்திருந்து வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவிக் கொள்ளலாம். இப்படி செய்ய உங்களுக்கு மென்மையான சருமம் கிடைக்கும்.

இதையும் வாசிக்கலாமே: உலர்ந்த அத்திய இந்த மாதிரி சாப்பிட்டா  ஹெல்தியா மட்டுமில்ல ஃபிட்டாவும் இருக்கலாம்!!! 

ஓட்ஸ் மற்றும் தயிர் ஃபேஷியல் ஸ்க்ரப் 

சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றுவதற்கு ஓட்ஸ் மற்றும் சருமத்திற்கான போஷாக்கு வழங்குவதற்கு தயிர் என இந்த ஸ்க்ரப்  சருமத்தின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்கிறது. இதற்கு 2 டேபிள் ஸ்பூன் பொடித்த ஓட்ஸில் ஒரு டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து முகத்தில் தடவி ஒரு சில நிமிடங்களுக்கு மசாஜ் செய்யுங்கள். 10 நிமிடங்களுக்குப் பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி டோனர் மற்றும் மாய்சரைசர் பயன்படுத்தவும். 

தயிர், மஞ்சள் தூள் மற்றும் கடலை மாவு ஃபேஷியல் ஸ்க்ரப் 

இந்த ஸ்க்ரப் செய்வதற்கு ஒரு டேபிள் ஸ்பூன் தயிரோடு 2 சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் கடலை மாவு சேர்த்து கலந்து கொள்ளவும். இதனை முகத்தில் தடவி மசாஜ் செய்யுங்கள். 10 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி கொள்ளலாம். இது சருமத்தில் உள்ள முகப்பருக்களை போக்கி, உங்களுக்கு மென்மையான சருமத்தை வழங்கும். 

  • vetrimaaran give voice over for harish kalyan diesel movie ஹரிஷ் கல்யாண் படத்தில் வெற்றிமாறனின் இன்னொரு அவதாரம்? வேற லெவல்ல இருக்கப்போது…