இந்த இரண்டு பொருட்கள் இருந்தால் போதும்… கருவளையத்தை மூன்றே நாட்களில் விரட்டி விடலாம்!!!

Author: Hemalatha Ramkumar
31 October 2022, 6:27 pm

கருவளையங்கள் மற்றும் நிறமிகளால் சோர்ந்து போய்விட்டீர்களா? கண்களுக்குக் கீழே உள்ள தோல் அடுக்கு மனித உடலில் உள்ள மிக மெல்லிய மற்றும் மிகவும் மென்மையான தோல் என்று கூறப்படுகிறது. இந்த அடுக்கில் போதுமான எண்ணெய் இல்லாமல் போகும் போது, கருவளையங்கள் ஏற்படுகிறது. பெரும்பாலும் கருமை நிறத்தில் இருந்து விடுபட நாம் பல விதமான ஃபேஷியல்களை முயற்சி செய்திருப்போம். இருப்பினும், நீங்கள் எதிர்ப்பார்த்த முடிவுகளைப் பெறமுடியவில்லை என்றால் இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும்.

தேவையான பொருட்கள் என்ன?
கற்றாழை
வாழைப்பழம்

எப்படி பயன்படுத்துவது?
வாழைப்பழத் தோலின் உட்புறத்தை கற்றாழையுடன் கலக்கவும். இந்த கலவையை நேரடியாக கண்களுக்கு கீழே பயன்படுத்த வேண்டும்.

சுமார் 20 நிமிடங்கள் காத்திருந்து குளிர்ந்த நீரில் கழுவவும். உங்கள் கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்கள் மற்றும் நிறமிகளை அகற்ற இது ஒரு எளிய வழி.

  • Dragon Movie Box Office Collection கயாடுவுக்கு படத்தில் முதலில் இந்த ரோல் தான்…அஸ்வத் மாரிமுத்து கொடுத்த ஷாக்.!