எரிச்சலூட்டும் வேர்க்குருவில் இருந்து தப்பிக்க எளிமையான இயற்கை தீர்வுகள்!!!
Author: Hemalatha Ramkumar1 May 2023, 6:38 pm
வெயில் காலம் வந்தாலே வேர்க்குரு உடன் வந்துவிடும். இது ஓரு மோசமான தோல் பிரச்சினை ஆகும். அதிகப்படியான வெப்பம் காரணமாக வேர்க்குரு ஏற்படுகிறது. சருமத்தை குளிர்வித்தால் இதிலிருந்து நிவாரணம் பெறலாம். எனவே, குளிர்ந்த நீரில் நனைத்த துணியைப் பயன்படுத்தி, 10 முதல் 15 நிமிடங்கள் வேர்க்குரு உள்ள பகுதிகளில் வைக்கவும். ஒவ்வொரு 3 முதல் 4 மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் இதைச் செய்யுங்கள். இதைத் தவிர இந்த தோல் பிரச்சனையை சமாளிக்க வேறு சில வழிகள் உள்ளன.
கேலமைன் லோஷனை சருமத்தில் தடவினால், அது வெப்பத்தை உறிஞ்சி, அந்த இடத்தை குளிர்விக்கும். காட்டன் பஞ்சு பயன்படுத்தி உங்கள் வேர்க்குரு மீது சிறிதளவு கேலமைன் லோஷனைத் தடவுங்கள். இது அமைதியான மற்றும் அரிப்பு எதிர்ப்பு விளைவை வழங்குகிறது. கலாமைனில் துத்தநாக ஆக்சைடு இருப்பதால், இது சருமத்திற்கு பல நன்மைகளை வழங்குகிறது.
கற்றாழையில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிசெப்டிக் தன்மை காரணமாக இது ஒரு நல்ல சரும குளிரூட்டியாக அமைகிறது. கற்றாழை வீக்கம் மற்றும் வலியை ஆற்றவும் உதவும். மேலும், அதன் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க உதவும். பாதிக்கப்பட்ட பகுதியில் கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்தினால் ஓரளவு நிவாரணம் கிடைக்கும்.
மஞ்சள் மற்றும் சந்தனம் போன்ற இயற்கை பொருட்களும் வேர்க்குருவைப் போக்க பயன்படுத்தப்படலாம். இவற்றில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் காரணமாக, இது சிவத்தல் மற்றும் அரிப்பு ஆகியவற்றைக் குறைக்கும். இந்த பொருட்களை தண்ணீரில் கலந்து பேஸ்ட்டை பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவலாம். ஆனால் முதலில், பேஸ்ட்டைப் பயன்படுத்துவதற்கு முன்பு தோலின் ஒரு சிறிய பகுதியில் சோதித்து பார்ப்பது நல்லது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.