சன் டான் பிரச்சினைக்கு முடிவுகட்டும் கற்றாழை ஐஸ்!!!

Author: Hemalatha Ramkumar
3 June 2023, 10:48 am

கோடை காலம் வந்துவிட்டாலே தோல் கோளாறுகள் உட்பட பல உடல்நலப் பிரச்சினைகளும் உடன் வந்துவிடும். அவற்றில் மிகவும் பொதுவானவை சன்பர்ன் மற்றும் டானிங். சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களுக்கு சருமத்தை வெளிப்படுத்துவது அதனை மோசமாக சேதப்படுத்துகிறது. இதனால் தடிப்புகள், வயதான அறிகுறிகள், டானிங் மற்றும் பிற தோல் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

இந்த சிக்கல்களைத் தவிர்க்க, நீங்கள் கற்றாழை ஐஸ் முயற்சி செய்யலாம். கற்றாழை ஐஸ் ஆரோக்கியத்திற்கும் முடி மற்றும் சருமத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. இது உங்கள் சருமத்தில் சன்ஸ்கிரீனாகவும் செயல்படுகிறது. இது சன்பர்ன் மற்றும் டானிங் பிரச்சனையை நீக்குவது மட்டுமல்லாமல், சருமத்தை ஈரப்பதமாக்குகிறது. இதற்கு ஒரு கிண்ணத்தில் சிறிய அளவு கற்றாழை ஜெல் மற்றும் லாவெண்டர் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலக்கவும். இதனை சருமத்தில் தடவவும். டானை அகற்றுவதில் இது மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.

சருமத்தில் ஐஸ்கட்டி பயன்படுத்துவது வீக்கத்தை மெதுவாக்குகிறது மற்றும் தோல் துளைகளைக் குறைக்க உதவுகிறது. இது அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க உதவுகிறது.
இதற்கு கற்றாழையில் இருந்து ஜெல்லை தனியாக எடுக்கவும்.இதனை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைக்கவும். இதனை ஐஸ் டிரேயில் ஊற்றி, ஃப்ரீசரில் வைக்கவும். மறுநாள் காலையில் முகத்தில் பயன்படுத்தவும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 387

    0

    0