பிக்மெண்டேஷன் பிரச்சினைக்கு என்டு கார்டு போட ஆலம் ஃபேஸ் பேக்!!!

Author: Hemalatha Ramkumar
10 September 2024, 6:45 pm

இன்று பல பெண்கள் தங்களுடைய சரும பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்கு பியூட்டி ப்ராடக்டுகளுக்கு பதிலாக வீட்டு வைத்தியங்களை விரும்புகின்றனர். ஏனெனில் வீட்டு வைத்தியங்கள் பொறுமையாக முடிவுகளை அளித்தாலும்  இயற்கை பொருட்கள் மூலமாக செய்யப்படும் வீட்டு வைத்தியங்கள் எந்த ஒரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. அந்த வகையில் பலருக்கு பிக்மென்ட்டேஷன் ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. இதற்கு ஆலம் ஒரு அற்புதமான தீர்வாக அமைகிறது. 

ஆலம் அல்லது படிகாரம் என்பது டபுள் சல்பேட் உப்புகளில் இயற்கையாக தோன்றக்கூடிய மினரல் காம்பௌண்ட் ஆகும். இதன் துவர்ப்பு பண்புகள் காரணமாக சரும பராமரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. பிக்மெண்டேஷன் பிரச்சனையிலிருந்து விடுபடுவதற்கு படிகாரத்தை எப்படி பயன்படுத்தலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம். 

ஆலம் மற்றும் ரோஸ் வாட்டர் 

ரோஸ் வாட்டர் உடன் படிகாரப் பொடியை கலந்து ஒரு பேஸ்ட்டை உருவாக்கவும். இதனை உங்களுடைய முகத்தில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் உலர வைக்கவும். பின்னர் மசாஜ் செய்து சிறிது நேரம் கழித்து தண்ணீர் வைத்து முகத்தை கழுவுங்கள்  ரோஸ் வாட்டர் கிடைக்காத பட்சத்தில் நீங்கள் சாதாரண தண்ணீரை பயன்படுத்தலாம். 

ஆலம் மற்றும் முல்தானி மிட்டி 

ஆலம் பொடியை சிறிதளவு முல்தானி மிட்டியோடு கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் காத்திருக்கவும். பின்னர் அது நன்றாக காய்ந்தவுடன் முகத்தை கழுவுங்கள். பிக்மெண்டேஷனில் இருந்து முற்றிலுமாக விடுவதற்கு இந்த வைத்தியங்களை நீங்கள் ஒரு வாரத்தில் 3 முறை பின்பற்றலாம். பிக்மெண்டேஷன் மட்டுமல்லாமல் பிற வகையான சரும பிரச்சனைகளுக்கும் இதனை நீங்கள் பயன்படுத்தலாம். 

படிகாரத்தில் உள்ள பாக்டீரியாக்களுக்கு எதிரான பண்புகள் முகப்பரு மற்றும் பிக்மெண்டேஷனில் இருந்து விடுபடுவதற்கு உதவுகிறது. அது மட்டுமல்லாமல் படிகாரத்தில் வீக்கத்தை குறைக்கும் பண்புகளும் உள்ளன. துவர்ப்பு பண்புகள் அடங்கிய இந்த படிகாரம் சருமத்தில் உள்ள துளைகளை இறுக்கி அதன் மூலமாக சரும துளைகள் அடைக்கப்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது. மேலும் இதனால் பிளாக் ஹெட் மற்றும் ஒயிட் ஹெட் ஏற்படுவது குறைகிறது. 

முகத்தில் ஏற்படும் சிவத்தல் அல்லது வீக்கம் போன்றவற்றை குறைப்பதற்கு படிகாரத்தை நீங்கள் பயன்படுத்தலாம். இதற்கு படிகாரத்தில் உள்ள வீக்க எதிர்ப்பு பண்புகள் உதவுகிறது. படிகாரம் சரும பிரச்சனைகளுக்கு அற்புதமான தீர்வு அளித்தாலும் இதனை உங்களுடைய சருமத்தில் பயன்படுத்துவதற்கு முன்பு முதலில் பேட்ச் சோதனை செய்து பாருங்கள் அல்லது தோல் மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையை பெறவும்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 267

    0

    0