கருவளையத்திற்கு குட்-பை சொல்ல பாதாம் எண்ணெயை எப்படி பயன்படுத்துவது???

Author: Hemalatha Ramkumar
18 December 2022, 4:04 pm

பாதாம் எண்ணெயை பல வழிகளில் பயன்படுத்தப்படலாம். தோல் மற்றும் முடி பராமரிப்பு என பாதாம் எண்ணெய் பல நன்மைகளைக் கொண்டுள்ளது. இது வரித் தழும்புகளை தடுக்கவும், சூரிய ஒளியில் இருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாக்கவும் உதவும். பாதாம் எண்ணெயில் வைட்டமின் ஈ உள்ளது. இது ஆரோக்கியமான சருமத்தை மேம்படுத்த உதவுகிறது.

இது கருவளையங்களை போக்கவும் அறியப்படுகிறது. ஹைப்பர் பிக்மென்டேஷன், மரபியல், மன அழுத்தம், முதுமை அல்லது தூக்கமின்மை – இவை அனைத்தும் உங்கள் கண்களைச் சுற்றியுள்ள தோலை கருமையாக்கும். உங்கள் கருவளையங்களுக்கு விடைகொடுக்க உதவும் பாதாம் எண்ணெயை உங்கள் தோல் பராமரிப்பு வழக்கத்தில் எப்படி சேர்ப்பது என்பதைப் பார்ப்போம்!

பாதாம் எண்ணெய் மசாஜ்:
இரவில் தூங்க செல்வதற்கு முன் உங்கள் முகத்தைச் சுத்தப்படுத்தத் தொடங்குங்கள். பின்னர் உங்கள் விரல் நுனியில் சில துளிகள் பாதாம் எண்ணெயை தடவி கண்களைச் சுற்றி மெதுவாக மசாஜ் செய்யவும். இதை தினமும் இரவில் செய்து காலையில் கழுவவும்.

பாதாம் எண்ணெய் மற்றும் தேன் பேக்:
4 துளிகள் பாதாம் எண்ணெயுடன் ஒரு துளி தேன் கலந்து படுக்கைக்குச் செல்லும் முன் கண்களைச் சுற்றி தடவி, காலையில் கழுவவும். இவை இரண்டிலும் ஈரப்பதமூட்டும் கூறுகள் உள்ளன. இது சருமத்தை மெதுவாகவும் சீராகவும் சரிசெய்ய உதவும்.

பால் மற்றும் பாதாம் எண்ணெய் பேக்:
பாலில் வயதான எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற கூறுகள் இருப்பதால், இது சருமத்தை பிரகாசமாக்க உதவுகிறது. சில துளிகள் பால் மற்றும் பாதாம் எண்ணெயைக் கலந்து கண்களைச் சுற்றி தடவி வந்தால், உங்கள் கருவளையங்கள் மெதுவாகக் குறைவதைக் காணலாம்.

ரோஸ் வாட்டர் மற்றும் பாதாம் எண்ணெய் பேக்:
ரோஸ் வாட்டர் உங்கள் சருமத்தை பிரகாசமாக்க உதவுகிறது மற்றும் நிறமியைக் குறைக்கிறது. சிறந்த முடிவுகளுக்கு, ரோஸ் வாட்டரை சில துளிகள் பாதாம் எண்ணெயுடன் கலந்து, உங்கள் கண்களைச் சுற்றி வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்யவும். இரவில் தடவி காலையில் கழுவவும்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!