ஆயில் ஸ்கின் இருக்கவங்க இனி கவலையே பட வேண்டாம்… வீட்ல தேன் இருந்தா போதும்… மொத்த பியூட்டி பார்லரே உங்க வீட்ல இருக்கா மாதிரி!!!

Author: Hemalatha Ramkumar
16 September 2024, 4:57 pm

பொதுவாக எண்ணெய் சருமம் கொண்டவர்கள் தங்களுக்கு ஏற்ற சிறந்த சரும பராமரிப்பு ப்ராடக்டுகள் தேர்வு செய்வதற்கு தடுமாறுவார்கள். எண்ணெய் சருமத்தில் எளிதாக முகப்பருக்கள், அடைபட்ட துளைகள், பிளாக்ஹெட் போன்றவை ஏற்படக்கூடும். சருமத்தில் அதிக எண்ணெய் சுரக்கப்படும் பொழுது அது அழுக்கு மற்றும் பாக்டீரியாக்களை கவர்ந்து அதனால் கூடுதல் சரும பிரச்சனைகள் ஏற்படலாம். ஆனால் எண்ணெய் சருமம் கொண்டவர்களுக்காகவே இயற்கை ஒரு அற்புதமான பொருளை படைத்துள்ளது. ஆம், தேனை பற்றி தான் பேசுகிறோம். தேனில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் இது எண்ணெய் உற்பத்தியை சீராக்கி, முகப்பருவை குறைத்து, ஒட்டுமொத்த சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ஒருவேளை இதற்கு முன்பு  உங்கள் எண்ணெய் சருமத்தில் இதுவரை தேனை பயன்படுத்தியதில்லை என்றால் நிச்சயமாக அதனை நீங்கள் முயற்சி செய்து பார்க்க வேண்டும். இப்போது தேனை எண்ணெய் சருமத்திற்கு எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம். 

தேன் மற்றும் ஓட்மீல் ஃபேஸ் மாஸ்க் 

ஒரு சிறிய பவுலில் ஒரு டேபிள் ஸ்பூன் தேன், 1/4 கப் ஓட்மீல் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் வெதுவெதுப்பான தண்ணீர் ஆகியவற்றை குழைத்து ஒரு பேஸ்ட்டை உருவாக்கவும். இதனை உங்களுடைய சுத்தமான, ஈரமான முகத்தில் தடவி ஒரு சில நிமிடங்களுக்கு வட்ட இயக்கங்களில் மசாஜ் செய்யவும். பின்னர் 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து ஃபேஸ் மாஸ்க் நன்றாக காய்ந்தவுடன் வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவி விட்டு மீண்டும் ஒரு முறை லேசாக மசாஜ் செய்யவும். பிறகு முகத்தை சுத்தமான டவல் ஒன்றால் ஒத்தி எடுத்து சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை லாக் செய்வதற்கு மாய்ஸரைசர் பயன்படுத்துங்கள். இந்த ஃபேஸ் மாஸ்க் உங்கள் சருமத்தை ஆற்றி அதில் உள்ள இறந்த செல்களை அகற்றும்.

தேன் மற்றும் எலுமிச்சை சாறு டோனர் 

ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் ஃப்ரஷான எலுமிச்சை சாற்றை நன்றாக கலக்கவும். உங்களுடைய விரல் நுனி அல்லது காட்டன் பந்து ஒன்றை எடுத்து நாம் தயார் செய்துள்ள கலவையில் முக்கி உங்களுடைய சுத்தமான முகத்தில் தடவவும். இந்த டோனரை உங்கள் சருமத்தில் ஒரு சில நிமிடங்களுக்கு வட்ட இயக்கங்களில் மசாஜ் செய்யுங்கள். பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவி சுத்தமான டவல் பயன்படுத்தி துடைக்கவும். இந்த மாஸ்க் சருமத்தில் உள்ள pH அளவை சமநிலைப்படுத்தி எண்ணெயை குறைக்கும். 

தேன் மற்றும் இலவங்கப்பட்டை ஃபேஸ் பேக் 

ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் அரை டீஸ்பூன் இலவங்கப்பட்டை பொடியை நன்றாக கலக்கவும். இதனை உங்களுடைய சுத்தமான முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் காத்திருந்து முகத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவவும். பின்னர் சுத்தமான துண்டு ஒன்றில் முகத்தை துடைத்துக் கொள்ளுங்கள். இந்த மாஸ்க் முகப்பரு மற்றும் வீக்கத்தை குறைக்க ஏற்றது. 

தேன் மற்றும் தயிர் ஃபேஸ் மாஸ்க் 

ஒரு டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் இரண்டு டேபிள் ஸ்பூன் தயிரை நன்றாக கலந்து உங்களுடைய சுத்தமான முகத்தில் தடவவும். இதனை 15 முதல் 20 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி முகத்தை துடைக்கவும். இந்த ஃபேஸ் மாஸ்க் உங்கள் சருமத்தை குளிர்ச்சியடைய செய்து அதற்கு தேவையான ஈரப்பதத்தை அளிக்கிறது. 

யாரெல்லாம் சருமத்தில் தேன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்? 

பொதுவாக தேன் என்பது  எண்ணெய் சருமம் கொண்ட அனைவருக்கும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. எனினும் பின்வரும் காரணங்களால் ஒரு சிலர் தேனை தவிர்ப்பது நல்லது. 

*தேன் அல்லது தேனீக்கள் உற்பத்தி செய்யும் ப்ராடக்டுகளுக்கு அலர்ஜி இருப்பவர்கள் 

*சென்சிட்டிவ் சருமம் கொண்டவர்கள் 

*தோலில் திறந்த காயங்கள் அல்லது வெட்டுக்கள்  

*ரோசேஸியா அல்லது எக்ஸிமா போன்ற சரும பிரச்சினை இருப்பவர்கள் தேனை தவிர்க்க வேண்டும்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 269

    0

    0