முகம் பொலிவுடன் அழகாக இருக்க வேண்டுமா வீட்டில் உள்ள சில பொருட்களே போதும். அதனை எப்படி செயாவது என இந்த பதிவில் பார்ப்போம்.
1. புதினா, வேப்பிலை, மருதாணி இலை மூன்றையும் காய் வத்து தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில், சிறிது எடுத்து பாலில் கலந்து , முகத்தில் பூசி 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால் , முகம் கருக்காமலும், வேர்க்குரு வராமலும் இருக்கும்.
2. வெள்ளையான முகத்தை பெற விரும்பினால், திராட்சை பழச்சாறை பிழிந்து எடுத்த பின் மீதம் உள்ள சக்கையை தூக்கி போடாமல் அதை முகத்தில் மாஸ்க் போன்று பூசி சிறிது நேரத்திற்கு பின் கழுவ வேண்டும். திராட்சை சாற்றில் அதிக அளவு ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளது. இது உங்கள் சருமத்தை சுத்திகரித்து இரத்தத்தில் உள்ள பிளேட்லட்ஸ்களை அதிகப்படுத்தி சருமம் புதிதாகவும், சுத்தமாகவும் மாற்றுகின்றது.
3.தக்காளி விழுது, ஆப்பிள் விழுது இரண்டையும் சம அளவு எடுத்து , பஞ்சில் முக்கி முகத்தில் ஒற்றி எடுத்தால் முகம் நல்ல பிரகாசமாகவும் , குளுமையாகவும் இருக்கும்.
4.பால், கடலைமாவு, கஸ்தூரி மஞ்சள் மூன்றையும் கலந்து முகத்தில் பூசி வந்தால் சருமம் பொலிவாக இருக்கும்.
5.தக்காளிச்சாறு, முல்தானி மெட்டி, கடலைமாவு, கஸ்தூரி மஞ்சள் மூன்றும் கலந்து முகத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.
6.பசும்பாலில் ஒரு தேக்கரண்டி கசகசாவை இரவில் ஊறப்போட்டு காலையில் மைய அரைத்து முகத்தில் தேய்த்து வர, முகம் சிகப்பழகு பெறும்.
7.வெள்ளரிக்காயின் சிறிய துண்டை எடுத்து அரைத்து, அதில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் கடலைமாவு சேர்த்து பேஸ்ட் போல் கலந்து முகத்திற்கு மாஸ்க் போன்று போட்டு, ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் முகம் பொலிவோடு இருக்கும்.
8.முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொள்ளவும் அதில் ஒரு ஸ்பூன் வெந்தயம், ஒரு ஸ்பூன் கசகசா போட்டு தண்ணீர் ஊற்றி ஊற வைத்து, பின் அதனை அரைத்து அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.
9.ரோஸ்வாட்டரில் சிறிது பால் சேர்த்து கலந்து, தினமும் இரவில் படுக்கும் முன் தடவி இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால் முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் வெள்ளையாக பளிச்சென்று மாறும்.
10.இரவில் படுக்கும் போது சூரிய காந்தி விதையை பாலில் ஊறவைத்து, மறுநாள் காலையில் அதில் சிறிதளவு குங்குமப்பூ மற்றும் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து கலந்து, அரைத்து பேஸ்ட் செய்து முகத்தில் 15 நிமிடம் ஊற வைத்து முகத்தை கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து 2 நாட்கள் செய்து வந்தால் சருமம் பொலிவுடன் இருப்பதை உணர முடியும்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.