வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தில் எந்தவித வாசனை மற்றும் சுவை இல்லாத ஒரு பொடியான முல்தானி மிட்டி பல்வேறு விதமான சரும பிரச்சனைகளுக்கு சிறந்த ஒரு தீர்வாக அமைகிறது. வடுக்கள் மற்றும் முகப்பருக்கள் முதல் பொலிவான சருமம் வரை உங்களுக்கு இருக்கக்கூடிய சரும பிரச்சனைகளுக்கு முல்தானி மிட்டியை எப்படி பயன்படுத்தலாம் என்பது பற்றிய சில குறிப்புகளை இப்பொழுது தெரிந்து கொள்ளலாம்.
எக்ஸ்ஃலியேட்டர் அல்லது ஃபேஸ் மாஸ்காக பயன்படுத்தப்படும் முல்தானி மிட்டி சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை அகற்றுகிறது. முல்தானி மிட்டியானது உலோகம் மற்றும் மினரல் சார்ந்த எக்ஸ்ட்ராக்ட்டுகளில் இருந்து கிடைக்கிறது.
முல்தானி மெட்டி எண்ணெய் சருமத்திற்கு ஏற்றதா?
முல்தானி மிட்டி சருமத்தில் உள்ள கூடுதல் எண்ணெயை அகற்றி முகப்பரு மற்றும் எண்ணெய் சருமம் ஏற்படுவதை தவிர்க்க உதவுகிறது. சரும துளைகளை சுத்தம் செய்து இயற்கையாகவே சருமத்தை உலர வைக்கிறது. இப்போது முல்தானி மிட்டியை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.
பளபளப்பு மற்றும் தெளிவான சருமத்தை பெற
ஒரு டீஸ்பூன் முல்தானி மிட்டியில் சிறிதளவு பால் சேர்த்து பேஸ்டாக கலந்து கொள்ளவும். இதனை உங்கள் முகம் மற்றும் கழுத்து முழுவதும் தடவுங்கள். 10 நிமிடங்கள் காய வைத்து வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவினால் பளபளப்பான மற்றும் தெளிவான சருமத்தை பெறலாம்.
ரோஸ் வாட்டருடன் முல்தானி மிட்டி
முல்தானி மிட்டி எடுத்து அதில் சில துளிகள் ரோஸ் வாட்டர் சேர்க்கவும். நன்றாக கலந்து பேஸ்ட் ஆக்கியதும் அதனை உங்கள் முகம் முழுவதும் தடவிக் கொள்ளுங்கள். 10 நிமிடங்கள் உலர வைத்து பின்னர் முகத்தை கழுவவும். இவ்வாறு செய்வது உங்கள் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை அகற்றி பருக்கள் ஏற்படுவதை தவிர்க்க உதவும்.
கிளிசரின் மற்றும் முல்தானி மிட்டி
ஒரு டீஸ்பூன் முல்தானி மிட்டியில் கிளிசரின் சேர்த்து பேஸ்டாக கலக்கவும். இந்த கலவையை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் தடவவும். 10 நிமிடங்கள் காய வைத்து விட்டு முகத்தை கழுவினால் சமமான தொனியை பெறுவீர்கள்.
எவ்வளவு முல்தானி மெட்டி பயன்படுத்த வேண்டும்?
சிறந்த முடிவுகளை பெறுவதற்கு எப்பொழுதும் 1 அல்லது 1 1/5 டீஸ்பூன் முல்தானி மிட்டியை
பேஸ்டாக கலந்து பயன்படுத்துங்கள்.
முல்தானி மெட்டி பயன்படுத்தும் பொழுது நீங்கள் பின்பற்ற வேண்டிய சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
முல்தானி மிட்டியை ஒருபோதும் தண்ணீரோடு சேர்த்து பயன்படுத்த வேண்டாம். பால், கிளிசரின், தேங்காய் எண்ணெய் அல்லது ரோஸ் வாட்டர் போன்ற மாய்சரைசிங் பொருட்களை பயன்படுத்துங்கள். குறிப்பாக உங்களுக்கு அதிக சென்ஸிட்டிவான சருமம் இருக்கும் பட்சத்தில் இதனை கட்டாயமாக நீங்கள் பின்பற்ற வேண்டும்.
பொடுகு பிரச்சனைக்கு இதனை பயன்படுத்தலாமா?
4 டேபிள் ஸ்பூன் முல்தானி மிட்டியில் 6 டேபிள் ஸ்பூன் வெந்தயப்பொடி மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் கலந்து 30 நிமிடங்கள் தடவி வர நல்ல முடிவை பெறுவீர்கள்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.