முகப்பருவை தெரியாமல் கிள்ளி விட்டீர்களா… அது வடுவாக மாறாமல் இருக்க இத பண்ணுங்க!!!

Author: Hemalatha Ramkumar
26 October 2022, 12:57 pm

எந்த ஒரு பெண்ணும் வெறுக்கக்கூடிய ஒன்று பருக்கள் தான். இது முகத்தின் அழகை கெடுப்பதோடு, ஒருவரின் மன தைரியத்தையும் குறைத்து விடும். முகப்பருவை பார்த்தவுடனே பலருக்கு அதனை கிள்ளி விட வேண்டும் போல தோன்றும். இருப்பினும், முகப்பருவை பற்றிய ஒரு முக்கியமான விதி என்னவென்றால் அதனை ஒரு போதும் கிள்ளி விடக்கூடாது. ஏனெனில் அவ்வாறு கிள்ளுவது வடுக்களை ஏற்படுத்தலாம் அல்லது அதனைச் சுற்றி உள்ள இடங்களுக்கு பரவலாம். ஒரு வேலை தவறுதலாக நீங்கள் பருவை கிள்ளி விட நேர்ந்தால் அதன் விளைவுகளில் இருந்து எவ்வாறு தப்பிப்பது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

படி 1: பரு தோன்றிய பிறகு, முதல் படி பாக்டீரியா எதிர்ப்பு சோப்புடன் உங்கள் கைகளை நன்கு கழுவ வேண்டும்.

படி 2: புதிய பருக்கள் தோன்றுவதைத் தடுக்க, நீங்கள் அந்தப் பகுதியை நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.

படி 3: பரு எச்சத்தை சமாளிக்க, நீங்கள் அதிக செயலில் உள்ள பொருட்கள் இல்லாமல் ஒரு எளிய ஹைட்ரோகலாய்டு முகப்பரு பேட்சையும் பயன்படுத்தலாம்.

படி 4: ஒரு சுத்தமான டிஷ்யூ பேப்பர் அல்லது காட்டன் துணியால் சுற்றப்பட்ட ஐஸ் க்யூப்பைப் பயன்படுத்துவது பருக்களைச் சுற்றியுள்ள தோலை ஆற்றுவதற்கான ஒரு சிறந்த முறையாகும்.

படி 5: உங்கள் சருமத்தை ஆற்ற மென்மையான மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தவும். ஏனெனில் அவை வீக்கமடைந்த சருமத்தை குணப்படுத்துவதற்கு ஏற்றது.

  • asin is the first choice for vaaranam aayiram movie வாரணம் ஆயிரம் படத்தில் அசின்? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!