குளிக்கும் போது முகத்தை கழுவுவது நல்ல யோசனையா…???

Author: Hemalatha Ramkumar
16 February 2023, 12:58 pm

குளிக்கும்போது உங்கள் முகத்தைக் கழுவுவது உங்களுக்கு சௌகரியமாக இருக்கலாம். ஆனால் அதிகப்படியான சூடான நீர் உங்கள் சருமத்தை உலர்த்தலாம் மற்றும் வெடிப்புகளை ஏற்படுத்தும். குளிப்பதற்கு முன் உங்கள் முகத்தை கழுவுவது சிறந்த யோசனையல்ல. குளித்து முடித்த பிறகு உங்கள் முகத்தை சுத்தம் செய்வது நல்லது. இதற்கான சில காரணங்களை இப்போது தெரிந்து கொள்வோம்.

இது உங்கள் துளைகளை அடைக்கக்கூடும்:
சரியான ஹேர்கேர் தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது உங்கள் தலைமுடியை அழகாக்கும். ஆனால் உங்கள் தலைமுடிக்கு ஷாம்பு பயன்படுத்தும்போது அது உங்கள் முகத்தில் படுவதை உங்களால் தவிர்க்க முடியாது. முடி பராமரிப்புப் பொருட்கள் உங்கள் தலைமுடிக்கு நன்மைகளைச் செய்தாலும், அது உங்கள் சருமத்தை எதிர்மறையாக பாதிக்கலாம். எடுத்துக்காட்டாக, எண்ணெய்கள் உங்கள் தலைமுடியை ஹைட்ரேட் செய்ய உதவுகின்றன. ஆனால் எண்ணெய் உங்கள் சருமத்தில் பரவும்போது அது அடைபட்ட துளைகள் மற்றும் முகப்பருவை ஏற்படுத்தலாம்.

இது உங்கள் சருமத்தை எரிச்சலடையச் செய்யலாம்
ஷாம்பு பயன்படுத்தி உங்கள் முகத்தை சுத்தம் செய்வதை நீங்கள் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. ஆனால் நீங்கள் குளிக்கும்போது உங்கள் தலைமுடியைக் கழுவும்போது இதுதான் நடக்கிறது. உங்கள் தலைமுடியை ஷாம்பு கொண்டு அலசும்போது, அது உங்கள் தோலுடன் தொடர்பு கொள்கின்றன. மேலும் உங்கள் ஷாம்பூவில் உள்ள பல செயற்கை பொருட்கள் உங்கள் சருமத்தை எதிர்வினையாற்றத் தொடங்கலாம்.

இது உங்கள் சருமத்தை உணர்திறன் கொண்டதாக மாற்றும்
வழக்கத்தை விட அதிக வினைத்திறன் கொண்ட தோல் ஒப்பனை பொருட்கள் மற்றும் சூரியக் கதிர்கள் அல்லது காற்றினால் கூட எளிதில் எரிச்சலடையலாம். அதிக உணர்திறன் வாய்ந்த தோல் விரைவில் சிவப்பு நிறமாக மாறும் மற்றும் இதனால் நீங்கள் அரிப்பு மற்றும் அசௌகரியத்தை உணரலாம்.

இது உங்களுக்கு முகப்பருவை ஏற்படுத்தலாம்
ஷாம்புகள் மற்றும் கண்டிஷனர்களில் உள்ள பல பொருட்கள் உங்கள் தலைமுடிக்கு அற்புதமானவை. ஆனால் நீங்கள் அவற்றை குளிக்கும்போது பயன்படுத்தினால், அவை முகப்பருவைத் தூண்டும். ஆகவே, உங்கள் சருமத்தில் தயாரிப்பு எச்சங்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்த உங்கள் வழக்கமான கடைசி படியாக உங்கள் ஃபேஸ் வாஷைப் பயன்படுத்துவது நல்லது.

  • Keerthy Suresh viral photos in baby john movie கழுத்தில் தாலியுடன் மேடையில் கவர்ச்சி…சுண்டி இழுக்கும் கீர்த்தி சுரேஷ்…வைரலாகும் புகைப்படம்…!
  • Views: - 508

    0

    0