பெண்களே உஷார்: ஹேர் ஸ்ப்ரே பயன்படுத்துவதால் ஏற்படும் மோசமான பக்க விளைவுகள்!!!

Author: Hemalatha Ramkumar
6 September 2024, 5:34 pm

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பல்வேறு விதமான அழகு சாதன பொருட்களை பயன்படுத்துகின்றனர். அவற்றில் ஒன்று ஹேர் ஸ்ப்ரே. ஹேர் ஸ்ப்ரேயில் உள்ள பாலிமர்கள் முடியை குறிப்பிட்ட வடிவத்தில் வைத்திருப்பதற்கு உதவுகிறது. ஆனால் ஹேர் ஸ்ப்ரே உண்மையில் தலைமுடி ஆரோக்கியத்திற்கு நல்லதா? ஹேர் ஸ்ப்ரே தலைமுடியை சேதப்படுத்துமா? இது போன்ற பல்வேறு விதமான கேள்விகள் நம் மனதில் எழுகிறது. இந்த கேள்விகளுக்கான பதிலை இப்போது தெரிந்து கொள்ளலாம். ஹேர் ஸ்ப்ரே பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி முதலில் தெரிந்து கொள்ளலாம். 

ஹேர் ஸ்ப்ரே பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்

உங்கள் தலைமுடியை நீங்கள் ஒரு குறிப்பிட்ட ஸ்டைலில் அமைத்த பிறகு அது மாறாமல் அப்படியே இருப்பதற்கு ஹேர் ஸ்ப்ரே உதவுகிறது. 

ஆங்காங்கே தலை முடி பறக்காமல் இருக்க நீங்கள் ஹேர் ஸ்ப்ரோ பயன்படுத்தலாம். 

நீராவிக்கு எதிராக செயல்பட்டு தலைமுடி தூக்கிக் கொண்டு நிற்காமல் இருக்க உதவுகிறது. 

ஒரு சில ஹேர் ஸ்ப்ரேக்கள் வெப்பத்திற்கு எதிராக பாதுகாப்பு அளிக்கிறது. 

மேலும் சில வகையான ஹேர் ஸ்ப்ரே தலைமுடிக்கு பளபளப்பான தோற்றத்தை அளிக்கிறது. 

ஹேர் ஸ்ப்ரே பயன்படுத்துவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் 

ஹேர் ஸ்ப்ரே அதிகப்படியாக பயன்படுத்தும் பொழுது ஏற்படும் பக்க விளைவுகள் பின்வருமாறு: அதிகப்படியாக ஹேர் ஸ்ப்ரே பயன்படுத்துவது உங்களுடைய தலைமுடியில் அழுக்கு படிவதற்கு வழிவகுக்கும். இதனால் தலைமுடி வறண்டு போவதோடு மட்டுமல்லாமல் தலைமுடி உதிர்தல் மற்றும் உடைந்து போவதற்கு வழிவகுக்கிறது. மேலும் ஹேர் ஸ்ப்ரேவை தொடர்ந்து பயன்படுத்தும் பொழுது அது மயிர்க்கால்களில் எரிச்சல் அல்லது பொடுகை ஏற்படுத்தலாம். குறிப்பாக நீங்கள் தலைமுடியை நன்றாக கழுவாத போது இது போன்ற பிரச்சனைகளை சந்திப்பீர்கள்.

அளவுக்கு அதிகமான ஹேர் ஸ்ப்ரே உங்களது தலைமுடியை மிகவும் விரைப்படைய செய்துவிடும். நீங்கள் அடிக்கடி ஹேர் ஸ்ப்ரே பயன்படுத்தினால் மிக எளிதாக உங்களுடைய தலைமுடி உடைந்து போகும்.

ஹேர் ஸ்ப்ரேவில் பயன்படுத்தப்பட்டுள்ள ஆல்கஹால் காரணமாக தலைமுடியை வறண்டு போக செய்து அதன் விளைவாக தலைமுடி உடைந்து போதல் அல்லது பிளவு முனைகளுக்கு வழி வகுக்கிறது. ஹேர் ஸ்ப்ரே தலைமுடியில் உள்ள ஈரப்பதத்தை நீக்கி முடி இழப்பை ஏற்படுத்துகிறது.

ஹேர் ஸ்ப்ரே உங்களுடைய தலைமுடியின் நிறத்தை மாற்றாது. மாறாக அது உங்களுடைய தலைமுடியின் இயற்கையான அமைப்பை தட்டையாக மாற்றி அதன் விளைவாக உங்களுடைய தலைமுடி ஒரு வித்தியாசமான நிறத்தில் தென்படுகிறது. இது நிச்சயமாக உங்களுடைய தலைமுடியில் தாக்கத்தை ஏற்படுத்தும். 

எனவே ஹேர் ஸ்ப்ரே பயன்படுத்துவது பாதுகாப்பானதா? 

ஆம், நீங்கள் ஒரு சில விஷயங்களை மனதில் வைத்துக்கொண்டு ஹேர் ஸ்ப்ரே பயன்படுத்தலாம். அதிகப்படியாக ஹேர் ஸ்ப்ரே பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள். 

உங்களுடைய தலைமுடிக்கு ஏற்ற ஹேர் ஸ்ப்ரே வாங்கவும். 

வெப்பம் பயன்படுத்தும் ஹேர் ஸ்டைலிங் சாதனங்கள் பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள். 

ஹேர் ஸ்ப்ரேவை சரியான வழியில் பயன்படுத்துங்கள். 

ஹேர் ஸ்ப்ரே பயன்படுத்திய பிறகு உங்களது தலைமுடியில் சீப்பை பயன்படுத்த வேண்டாம். இது பிளவு முனைகளுக்கு வழிவகுக்கும். 

வழக்கமான முறையில் நீங்கள் ஹேர் ஸ்ப்ரே பயன்படுத்துபவராக இருந்தால் வாரம் ஒரு முறையாவது உங்களுடைய தலைமுடியை நன்றாக சுத்தம் செய்து ஹேர் ஸ்ப்ரே எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்துங்கள். 

மேலும் நல்ல கண்டிஷனர் பயன்படுத்தவும். இது உங்களுடைய தலைமுடி வறண்டு போவதை தடுக்க உதவும்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!