கோடைக்கால சரும பிரச்சினைகள் அனைத்தையும் போக்கும் விலை மலிவான வாழைப்பழம்!!!

Author: Hemalatha Ramkumar
6 May 2022, 5:59 pm
Quick Share

கோடை காலத்தில் உங்கள் முகம் பொலிவிழந்து காணப்படுகிறதா அப்போ உங்க முகத்தை வாழைப்பழத்தை கொண்டு பொலிவாக வைத்துக் கொள்ளலாம்.

*வெயில் காலம் வந்தாலே முகம் பொலிவின்றி காணப்படும் . ஆகவே, கோடை காலங்களில் நமது சருமத்தை பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டியது ரொம்ப அவசியம். வெயில் காலங்களில் வெளியில் போகும்போது மெல்லிய சுத்தமான துணியால் முகம் முழுவதும் மறைக்கிற மாதிரி கட்டி கொண்டு செல்வது நல்லது.
காலை, மாலை‌ இரண்டு நேரமும் ஐஸ் கட்டியை எடுத்து ஒரு துணியில் கட்டி முகம் முழுவதும் ஒத்தடம் கொடுக்கலாம். அதையும் மீறி சிலரது முகம் பொலிவிழந்து வறண்டு காணப்படும். அப்படி பட்டவர்கள் வாழைப்பழம் கொண்டு உங்கள் முகத்தை பொலிவுடன் வைத்துக் கொள்ளுங்கள்.

*வாழைப்பழத்துடன் பிற பொருட்களையும் சேர்த்து முகத்தை எப்படி பொலிவுடன் வைத்து கொள்வது என்று பார்ப்போம்.

*சரும நிறத்தை அதிகரிக்க:
வாழைப்பழத்தை நன்கு மசித்து அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இது சருமத்தில் இருக்கும் கருமையை போக்கி சருமத்திற்கு நிறம் அளிக்கிறது.

*கழுத்தில் உள்ள கருமை நீங்கும்:
வாழைப்பழம், பப்பாளிபழம், இரண்டு ஸ்பூன் பாதாம் எண்ணெய் , தேங்காய் பால் சேர்த்து நன்கு கலந்து பின்பு முழு கழுத்துக்கும் அதை பேக் போட்டு உலர விடவும். இப்படி இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்து வந்தால் கழுத்தில் உள்ள கருமை நீங்கி விடும்.

*தழும்புகள் மறையும்:
சிலருக்கு முகத்தில் தழும்புகள் காணப்படும் . இவற்றை நீக்க. முதலில் நான்கு துண்டு வாழைப்பழம், ஓட்ஸ் இரண்டு டேபிள்ஸ்பூன், தேன் ஒரு ஸ்பூன் சேர்த்து நன்கு அரைத்து , அந்த கலவையை தினமும் தழும்புகள் மேல் தடவி வந்தால் நாளடைவில் மறையும்.

*கருவளையம் நீங்கும்:
வாழைப்பழம் இரண்டு துண்டு, பால் சிறிதளவு சேர்த்து அரைக்கவும். இதை‌ கண்களை சுற்றி அப்ளை செய்து பத்து ‌நிமிடங்களுக்கு மசாஜ் செய்து , பின்னர் கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் நாளடைவில் கருவளையங்கள் நீங்கி விடும்.

* சுருக்கங்கள் மறைய:
வாழைப்பழம், பாலாடை இவை‌ இரண்டையும் கலந்து பேஸ்ட் போல் செய்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும் . இப்படி வாரம் ஒரு செய்து வந்தால், வறட்சி மற்றும் சுருக்கங்கள் மறைந்து மிருதுவான சருமத்தை பெறலாம்.

*பருக்கள் மறையும்:
ஒரு வாழைப்பழம், இரண்டு டீஸ்பூன் கோதுமை மாவு, ஒரு டீஸ்பூன் பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின்பு அந்த கலவையை முகத்தில் தடவி பத்து நிமிடங்கள் ஊற விடுங்கள். இப்படி செய்தால் முகத்தில் காணப்படும் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் மறையும்.

*வாழைப்பழ ஃபேஸ் பேக்:
நன்றாக பிசைந்த வாழைப்பழத்துடன், எலுமிச்சை சாறு, ஒரு ஸ்பூன் கடலைமாவு, ஒரு சிட்டிகை கஸ்தூரி மஞ்சள் சேர்த்து ஃபேஸ் பேக் பதத்தில் கலந்து கொள்ளவும். பிறகு அந்த கலவையை ஃபேஸ் பேக்காக அப்ளை‌ செய்யவும். இப்படி செய்வதால் அடைபட்ட சரும துளைகள் நீங்கி, கரும்புள்ளிகள் மறையும்.

* கூந்தல் நன்கு வளர :
கூந்தலுக்கு வாழைப்பழத்தை பயன்படுத்தும் போது, வாழைப்பழத்தை நன்கு மசித்து அதனுடன் பாதாம் எண்ணெய் சேர்த்து பயன்படுத்தலாம். இந்த கலவையை உங்கள் கூந்தலில் பேக்காக பயன்படுத்தி சிறிது நேரம் கழித்து ஷாம்பு போட்டு வாஷ் செய்யலாம்.
பாதாம் எண்ணெய் கூந்தலுக்கு நன்கு ஊட்டமளிக்கும். இதனால் உங்கள் கூந்தல் பளபளப்பாகவும், மிருதுவாகவும்
இருக்கும். மேலும் வாழைப்பழத்துடன், தயிர் சேர்க்கும் கலவையை உங்கள் கூந்தலுக்கு பயன்படுத்தலாம். இது பொடுகை நீக்க உதவுகிறது.

*கை மூட்டுகள், கால் மூட்டுகள், கழுத்து பகுதி போன்ற கருமையான இடங்களில் வாழைப்பழத்தின் தோலை தேய்த்தால் கருமை மறைந்து நல்ல தீர்வு கிடைக்கும்.

இப்படி வாழை‌ப்பழத்தை பயன்படுத்தி கோடை காலத்தில் உங்கள் முகத்தை பொலிவாகவும் , ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ளுங்கள்.

  • sarathkumar latest news நடுரோட்டிற்கு வந்த சரத்குமார்…வைரலாகும் வீடியோவால் பரபரப்பு..
  • Views: - 1352

    0

    0