அழகான, நீண்ட கூந்தலுக்கு பண்டைய மக்கள் பின்பற்றிய இரகசியம்!!!

Author: Hemalatha Ramkumar
7 May 2022, 6:01 pm
Quick Share

இந்தியாவின் பாரம்பரிய உணவு அரிசி. இந்தியாவின் பல பகுதிகளில், அரிசி கழுவிய நீரானது அழகு பராமரிப்பு முறைகளில் பயன்படுத்தப்படுகிறது. கூந்தல் பராமரிப்புக்கு பெரிதும் உதவுகிறது. ஆய்வுகளின் படி அரிசி கழுவிய நீரானது கூந்தலின் எலாஸ்டிசிட்டியை அதிகரித்து , அதனால் முடி பாதிக்கப்படுவதை தடுக்கிறது என்பது தெரிய வந்துள்ளது.

அரிசியை ஊற வைத்த தண்ணீர் மற்றும் சாதம் வடித்த பிறகு கிடைக்கும் தண்ணீரில் ஸ்டார்ச் சத்து அதிகமாக உள்ளது. இந்த தண்ணீரைக் கொண்டு முடியை அலசி வந்தால் தலைமுடி நன்கு ஆரோக்கியமாகவும், வேகமாகவும் வளரும்.

*அரிசி நீரில் அமினோ அமிலங்கள் , வைட்டமின் பி, வைட்டமின் இ, தாதுஉப்புக்கள், ஆன்டிஆக்ஸ்டிண்ட்கள் நிறைவாக‌ உள்ளன.‌ இந்த அரிசி கழுவிய நீரானது முடிக்கு மட்டுமின்றி சருமத்துக்கும் நலன் தரும்.

*அரிசி கழுவிய நீரை தொடர்ந்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் , பிளவுபட்ட முடிகள் நீங்குகிறது , முடி மென்மையாகிறது, முடி பொலிவுடன் பிரகாசமாக காணப்படுகிறது. அனைத்துக்கும் மேலாக முடி நீளமாகவும், உறுதியாகவும் வளரும்.

* அரிசி கழுவும் நீர் தயாரிப்பது எப்படி?
அரிசி நீர் தயாரிப்பது மிகவும் எளிதானது . அரிசியை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி ஊற விட வேண்டும். பிறகு அரிசியை களைந்தெடுத்துவிட்டால் கிடைக்கும் தண்ணீர்தான் அரிசி நீர். அரிசியை வேகவைத்து சாதம் வடித்ததும் கிடைக்கும் வடிநீர்‌ கூட ஆரோக்கியமானது தான்.

* இதை விட சற்று புளித்த அரிசி நீரால் பலன் அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆறு மணி முதல் 12 மணி நேரம் வரை தண்ணீரை ஊற வைத்து அதன் பிறகு பயன்படுத்தலாம். இப்படி செய்யும் போது பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்களின் அளவு அதிகரிக்கிறது.

*அரிசி தண்ணீரை‌ எப்படி பயன்படுத்துவது?
அரிசி தண்ணீர் ஒரு கண்டீஷனர் போல பயன்படும்.

*ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு தலைக்கு குளிக்க வேண்டும். நன்கு சுத்தம் செய்த பிறகு தலையில் அரிசி நீரை‌ விட்டு மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். 15 முதல் 20 நிமிடங்கள் ஊற‌ விட்டு கழுவ‌ வேண்டும். இப்படி செய்யும் போது முடி உதிர்வது நின்று விடும். முடி ஆரோக்கியமாக இருக்கும்.

* ஒவ்வொரு முறை தலைக்கு குளிக்கும் போது இதே போன்று கூந்தலுக்கு இந்த நீரை பயன்படுத்தி வந்தால் கூந்தலின் வளர்ச்சி தடைபடாது.கூந்தலுக்கு பொலிவும், போஷாக்கும் கிடைக்கும். முடி உதிர்வு, வெடிப்பு, வறட்சி போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.

  • sarathkumar latest news நடுரோட்டிற்கு வந்த சரத்குமார்…வைரலாகும் வீடியோவால் பரபரப்பு..
  • Views: - 1746

    1

    0