சருமத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்க சர்க்கரை மட்டும் பயன்படுத்தினாலே போதும் . இது முகத்திற்கு நிறத்தை தருவதோடு மட்டுமல்லாமல் முகத்தில் இருக்கும் அழுக்குகள், தூசுகள் மற்றும் இறந்த சரும செல்களை நீக்க உதவுகிறது.
சர்க்கரையை நீரில் கரைத்து பின் அதை முகத்தில் நன்றாக தடவி காய்ந்த பிறகு முகத்தை சாதாரண தண்ணீரில் கழுவ முகத்தில் உள்ள எண்ணெய் கசடு நீங்கி முகத்திற்கு அழகு கூட்டும்
எலுமிச்சை சாறும், சர்க்கரையும்:
சர்க்கரை 1 டேபிள்ஸ்பூன், எலுமிச்சை சாறு 5 சொட்டு, ஆலிவ் ஆயில் 3 சொட்டு மூன்றையும் நன்கு கலக்கி கொள்ளுங்கள்.
பின்பு இதை முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். அரைமணி நேரம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடுங்கள். இதை தொடர்ந்து 2 வாரத்திற்கு செய்து வந்தால், முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், அழுக்குகள் நீங்கி முகம் பளிச்சென்று இருக்கும்.
முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க:
முகத்தில் உள்ள முடிகளை அகற்ற முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தும் ஒன்றாக கலந்து பசை போல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வெளியேறி விடும்.
கஸ்தூரி மஞ்சளும், சர்க்கரையும்:
ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள் அதில் சர்க்கரை 1 ஸ்பூன், ஆலிவ் ஆயில் 6 சொட்டு, கஸ்தூரி மஞ்சள் 1/4 ஸ்பூன் அனைத்தையும் ஒன்றாக கலந்து முகத்தில் பூசி பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்வதால் முகம் பொலிவோடு இருக்கும்.
முகத்திற்கு தேன் மற்றும் சர்க்கரை ஸ்கரப்:
முகத்தை ஸ்கரப் செய்வதற்கு முன் உங்கள் முகத்தை நன்றாக கழுவ வேண்டும். முகத்தை சுத்தப்படுத்திய பின்பு, ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொள்ளவும். அதில் கடலைமாவு 1 டேபிள்ஸ்பூன், எலுமிச்சை சாறு 1/2 ஸ்பூன், சர்க்கரை 1 டேபிள்ஸ்பூன், தேன் 1/2 ஸ்பூன் மூன்றையும் நன்கு கலந்து கொள்ளவும்.
பிறகு, அந்தக் கலவையை முகத்தில் தடவி விட்டு அரைமணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். இப்படி செய்வதால் முகத்தில் உள்ள கருமை, கரும்புள்ளிகள், பரு தழும்புகள் நீங்கி முகம் பளிச்சென்று, பொலிவுடன் காணப்படும்.
இப்படி, வீட்டில் எளிமையாக கிடைக்கக்கூடிய சர்க்கரை பயன்படுத்தி முகத்தை புத்துணர்ச்சியாகவும், பொலிவுடனும் வைத்துக் கொள்ளுங்கள்.
நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…
வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…
கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…
எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
This website uses cookies.