UV கதிர்களிடம் இருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்கும் திராட்சை பழங்கள்!!!
Author: Hemalatha Ramkumar27 January 2023, 5:34 pm
மிதமான சூரிய ஒளியின் வெளிப்பாடு நம் உடலுக்கு தேவையான வைட்டமின் D வழங்குவதில் சிறந்தது. அதே நேரத்தில் அதிக அளவு சூரிய ஒளி உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கலாம். அந்த வகையில் இது சருமத்திற்கு சேதத்தை ஏற்படுத்தும். எனவே, அதிக சூரிய வெளிச்சத்தில் இருந்து உங்கள் சருமம் பாதுகாக்கப்படுவதை எவ்வாறு தீர்மானிப்பது?
இது போன்ற விஷயத்திற்கு உங்கள் சருமத்திற்கு திராட்சை போன்ற இயற்கை தீர்வுகள் உதவும். திராட்சை உங்கள் தோலில் அதிசயங்களை செய்ய முடியும். சமீபத்திய ஆய்வின்படி, தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களில் இருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாக்க திராட்சை உதவுகிறது. திராட்சையின் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி மேலும் பார்ப்போம்.
●இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
திராட்சையில் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும் பண்புகள் உள்ளன. இது இதய நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்க உதவுகிறது.
●இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது
திராட்சையில் அதிக சர்க்கரை உள்ளடக்கம் இருந்தாலும், இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற வகையில் குறைந்த அளவிலிருந்து மிதமான ஜி.ஐ. வரை கொண்டுள்ளது.
●உங்கள் கண் ஆரோக்கியத்திற்கு நல்லது
திராட்சையில் லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அவை பொதுவான கண் நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்க உதவும்.
●நினைவாற்றல் மற்றும் மனநிலைக்கு நல்லது
உங்கள் உணவில் திராட்சையை சேர்த்துக்கொள்வது மனநிலை மற்றும் நினைவாற்றலை மேம்படுத்த உதவும் என்று குறிப்பிடத்தக்க ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
●எலும்பு ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கிறது
திராட்சையில் பொட்டாசியம், வைட்டமின்கள் பி, சி மற்றும் கே மற்றும் மாங்கனீசு உள்ளது. இவை அனைத்தும் எலும்பு ஆரோக்கியத்திற்கு சிறந்தவை. இந்த பண்புகள் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்கள் வராமல் தடுக்கவும் உதவும்.
0
0