கருவளையங்களை போக்க நீங்கள் செய்யக்கூடிய வீட்டு வைத்தியங்கள்!!!
Author: Hemalatha Ramkumar26 January 2022, 2:24 pm
கடைகளில் கிடைக்கும் பல தயாரிப்புகள் கருவளைங்களை போக்குவதாக உறுதியளிக்கின்றன. ஆனால் உண்மையில், துரதிர்ஷ்டவசமாக, அவை நமக்கு வீண் செலவுகளையே வைக்கின்றன. கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக நாம் வீட்டில் முடங்கி கிடக்கும் போது மோசமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதால் கருவளையங்கள் அல்லது புள்ளிகள் மற்றும் வீங்கிய கண்கள் ஏற்படுவதாக தோல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இன்றைய நாட்களில் கருவளைங்கள் மிகவும் பொதுவானவை. கண்களைச் சுற்றியுள்ள தோல் மிகவும் மெல்லியதாகவும் உணர்திறன் உடையதாகவும் இருப்பதால் இது கண் பகுதியைச் சுற்றி ஏற்படுகிறது. இது மிகவும் மெலிந்த நரம்பைக் கொண்டுள்ளது. இது உள் அல்லது வெளிப்புற எதிர்வினைகளால் எளிதில் விரிவடைகிறது அல்லது சேதமடைகிறது. அழுக்கு, மாசு, முதுமை, மது அருந்துதல், மன அழுத்தம், வெயில், புகைபிடித்தல், தூக்கமின்மை, தவறான உணவுப்பழக்கம் போன்றவற்றின் காரணமாக அதிக நிறமியை ஏற்படுத்துகிறது. இதனை விரைவில் சரி செய்ய உதவும் சில குறிப்புகளை பார்க்கலாம்.
1. போதுமான தூக்கத்தைப் பெறுங்கள்:
ஏழு மணிநேரம் போதுமான தூக்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள். தூக்கமின்மை கண்களின் கருவளைங்களை இன்னும் தெளிவாக்குகிறது.
2. டயட் முக்கிய பங்கு வகிக்கிறது –
வைட்டமின் B6 மற்றும் B12, கால்சியம் மற்றும் ஃபோலிக் அமிலத்தை உங்கள் உணவில் சேர்க்கவும்.
3. நீரேற்றமாக இருங்கள் – நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் எப்போதும் நீரேற்றமாக இருங்கள். உங்கள் திரவ அளவை அதிகமாக வைத்திருங்கள். உங்கள் நாள் முழுவதும் தண்ணீர் குடிக்கவும். நீர்ச்சத்துடன் இருப்பது கருவளையங்கள் மற்றும் வீங்கிய கண்களைத் தடுக்க உதவும்.
4. கண் பேடுகளை பயன்படுத்தவும்:
மெதுவாகப் பயன்படுத்தப்படும் கருப்பு/பச்சை தேநீர் பை அல்லது குளிர் அழுத்தி இரத்த நாளங்களின் விரிவாக்கத்தைக் குறைக்கலாம். கண்களைச் சுற்றியுள்ள பகுதியை தேய்க்க வேண்டாம். அது நிலைமையை மோசமாக்கும்.
5. எப்போதும் சூரிய ஒளியில் வெளியே செல்வதற்கு முன் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள்:
நீங்கள் வெயிலில் இருந்தால், குறிப்பாக காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அதிக நேரம் இருக்கும் போது, ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் சன்ஸ்கிரீனை மீண்டும் பயன்படுத்தவும்.