இந்த எண்ணெய்களை தொடர்ந்து யூஸ் பண்ணா தலைமுடி கிடுகிடுன்னு முட்டி வரை வளருமாம்!!!

Author: Hemalatha Ramkumar
2 October 2022, 7:06 pm

ஒரு பூ வயதாகி, காய்ந்து, காலப்போக்கில் வாடிப்போவதை நாம் அனைவரும் அறிவோம். இதே விதி தலைமுடிக்கும் பொருந்தும். நீளமான மற்றும் அடர்த்தியான தலைமுடி வேண்டும் என்ற ஆசை அனைத்து பெண்களுக்கும் உண்டு. ஆகவே அதனை வளர்ப்பதற்கு நம்மால் முடிந்தவரை அனைத்து முயற்சிகளையும் செய்தாலும் அது வறட்சி மற்றும் சேதத்திற்கு ஆளாகிறது. ஆனால் முடி வளர்ச்சியை அதிகரிக்கவும் முடி அடர்த்தியை அதிகரிக்கவும் உங்கள் உச்சந்தலையை கவனித்தாலே போதுமானது. அந்த வகையில் உங்கள் முடியின் அடர்த்தியை அதிகரிக்க உதவும் சில சிறந்த எண்ணெய்களைப் பற்றிப் பார்ப்போம்.

முடி அடர்த்தியை அதிகரிக்கவும், முடி வளர்ச்சியை அதிகரிக்கவும் உதவும் 6 எண்ணெய்கள்:
ஜோஜோபா எண்ணெய்
இது முடி மற்றும் உச்சந்தலையை ஈரப்பதமாக்க உதவுகிறது. ஜோஜோபா எண்ணெய் முடி உதிர்வதைத் தடுக்கவும், முடி அடர்த்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

புதினா எண்ணெய்
இந்த எண்ணெய் முடி வேர்களில் வேலை செய்கிறது.
இது அனாஜென் முடியை அதிகரிப்பதன் மூலம் முடி வளர்ச்சி மற்றும் முடி அடர்த்தியை அதிகரிக்கிறது.

ஆலிவ் எண்ணெய் முடியின் தரத்தை பராமரிக்க இந்த எண்ணெய் சிறந்தது.
ஆலிவ் எண்ணெயில் பிரபலமாக ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இது முடியை ஈரப்பதமாக்குவதோடு முடி வளர்ச்சியையும் அதிகரிக்க உதவுகிறது.

முடியின் ஆரோக்கியத்திற்கு தேங்காய் எண்ணெய்
முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
பொதுவாக பயன்படுத்தப்படும் முடி எண்ணெய்களில் ஒன்றான தேங்காய் எண்ணெய், முடி சேதம் மற்றும் உடைவதைத் தடுக்க உதவுகிறது. இது முடியின் அளவை பராமரிக்க உதவுகிறது.

உதிர்ந்த தலைமுடி மீண்டும் வளர வெங்காய எண்ணெய்
வெங்காயம் முடி வளர்ச்சிக்கு சிறந்ததாக கருதப்படுகிறது. வெங்காய சாறு மற்றும் வெங்காய எண்ணெய் இரண்டும் முடி அடர்த்தியை அதிகரிக்க ஒரு அமுதமாக கருதப்படுகிறது. வெங்காயத்தில் உள்ள கந்தகம் முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும்.

முடி வளர்ச்சியை அதிகரிக்க ரோஸ்மேரி எண்ணெய்
ரோஸ்மேரி எண்ணெய் முடி வளர்ச்சியை மேம்படுத்த உதவும். இந்த எண்ணெயானது முடி உதிர்தலுக்கு சிகிச்சையளித்து, முடி வளர்ச்சியை மேம்படுத்தும்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ