தலைமுடி எப்பவும் பிசுபிசுப்பாவே இருந்தா நீங்க டிரை பண்ண வேண்டிய பொருள் இது தான்!!!

Author: Hemalatha Ramkumar
28 September 2024, 4:44 pm

தலைமுடிக்கு ஷாம்பு பயன்படுத்திய பிறகும் எப்போதும் தலைமுடி பிசுபிசுப்பாகவே இருக்கிறதா? இது சீபம் என்ற அத்தியாவசிய எண்ணெய் நமது உடலில் உற்பத்தியாகும் பொழுது பொதுவாக ஏற்படுகிறது. இந்த சீபம் உங்களுடைய தலைமுடி மற்றும் மயிர்க்கால்களுக்கு தேவையான போஷாக்கை அளிக்கிறது. ஆனால் மழைக்காலம் மற்றும் கோடை காலங்களில் சீபம் அதிகப்படியாக உற்பத்தியாகும் போது அதனால் உங்களுடைய தலைமுடி பிசுபிசுப்பு தன்மையோடு காணப்படும். இந்த அதிகப்படியான எண்ணெய் மயிர்க்கால்களில் அரிப்பு, அசௌகரியம், பொடுகு மற்றும் சில சமயங்களில் டெர்மாடிடிஸ் பிரச்சினையை கூட ஏற்படுத்தலாம். இதற்காக வருந்தாதீர்கள். உங்களுக்காகவே ஒரு சில வீட்டு வைத்தியங்கள் உள்ளன. அந்த வைத்தியங்கள் மூலமாக உங்களுடைய எண்ணெய் மிகுந்த மயிர்கால்கள் மற்றும் பிசுபிசுப்பான தலைமுடியை எப்படி சமாளிப்பது என்பதை பார்ப்போம். 

கற்றாழை 

ஊட்டச்சத்துக்களால் நிரம்பிய காம்பவுண்டுகளை கொண்ட கற்றாழை மயிர்க்கால்களுக்கு தேவையான போஷாக்கை வழங்கி, தலை முடியை மென்மையாகுகிறது. இதன் பலன்களை பெறுவதற்கு கற்றாழை செடியிலிருந்து ஒரு மடலை பறித்து அதில் உள்ள சாற்றை ஒரு கரண்டியால் சுரண்டி உங்களுடைய தலைமுடி மற்றும் மயிர் கால்களில் தடவுங்கள். கற்றாழை சீபம் உற்பத்தியை சீராக்கி, அதிலுள்ள அதிகப்படியான எண்ணெய் மற்றும் பிசுபிசுப்பு தன்மை ஏற்படுவதை குறைக்கிறது. கூடுதலாக வறண்ட தலை முடி, வீக்கம் அல்லது எரிச்சல் கொண்ட மயிர்கால்களுக்கு இது ஒரு அற்புதமான இயற்கை தீர்வாக அமைகிறது. 

தயிர் 

பல்வேறு தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தயிர் பல அற்புதங்களை நிகழ்த்துகிறது. இது ஒரு சிறந்த போஷாக்கு அளிக்கும் ஹேர் மாஸ்க்காக செயல்படுகிறது. ப்ரோபயோடிக் பாக்டீரியா நிறைந்த தயிர் மயிர்கால்களின் இயற்கையான pH சமநிலையை பராமரித்து ஆரோக்கியமான தலைமுடி வளர்ச்சியை அளிக்கிறது. தயிரில் உள்ள அமிலத்தன்மை பூஞ்சை மற்றும் பாக்டீரியா காரணமாக ஏற்படும் பிரச்சனைகளை எதிர்த்து போராடுகிறது. குறிப்பாக பொடுகு பிரச்சனைக்கு தீர்வு காண நினைப்பவர்கள் தயிரை பயன்படுத்தலாம். மேலும் தயிர் தலைமுடிக்கு தேவையான ஈரப்பதத்தை அளித்து, எண்ணெய் உற்பத்தியை சமநிலையாக்கி, மயிர்கால்களை மென்மையாக்குகிறது. 

முட்டை 

பல்வேறு ஊட்டச்சத்துக்கள் அடங்கிய இந்த உணவு பல தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு பழமையான வைத்தியம். இதில் உள்ள வியப்பூட்டும் பண்புகள் மயிர்க்கால்களில் உள்ள இயற்கையான சீபம் சமநிலையை சீராக்கி, எண்ணெய் மற்றும் வறண்ட தலை முடி வகைகள் ஆகிய இரண்டிற்குமே பலன் அளிக்கிறது. இதன் தனித்துவமான பண்புகள் எண்ணெய் மிகுந்த தலைமுடியில் அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியை குறைக்கிறது. அதே சமயத்தில் வறண்ட தலைமுடியில் எண்ணெய் உற்பத்தியை தூண்டுகிறது. சல்ஃபர் அதிகம் காணப்படும் முட்டையின் மஞ்சள் கரு தலை முடியை மென்மையாக்கி அதனை எளிதாக படிய வைக்கிறது.

ஒருவேளை இந்த மழைக்காலத்தில் உங்கள் தலைமுடி அதிக பிசுபிசுப்பு தன்மையோடு இருந்தால் இந்த வைத்தியங்களை நிச்சயமாக முயற்சி செய்து பார்த்து பலன் பெறுங்கள்.

இதனால் எந்த ஒரு பக்க விளைவும் உங்களுக்கு ஏற்படாது. எனினும் ஆஸ்துமா, சளி, இருமல் பிரச்சனை இருப்பவர்கள் கற்றாழை மற்றும் தயிரை தவிர்த்து விட்டு முட்டையை மட்டும் பயன்படுத்துவது சிறந்தது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • jana nayagan shooting finished in may mid and he possibly started political tour in may end முடியப்போகுது படப்பிடிப்பு, இனி அரசியலில் சுறுசுறுப்பு, சுற்றுப்பயணத்திற்கு தயாராகும் விஜய்?