சருமத்தை இயற்கையான முறையில் பொலிவு பெற செய்ய ஏதேனும் வழிகளை தேடிக் கொண்டு இருக்கிறீர்கள் என்றால் உங்களுக்கான பதில் இதோ இங்கேயே உள்ளது. எளிமையான வழியில் அதிகம் செலவு செய்யாமல் சருமத்தை அழகாக்கும் சில டிப்ஸ்.
புதினா, வேப்பிலை, மருதாணி இலை மூன்றையும் உலர வைத்து பொடியாக்கி, அதில் சிறிதளவு எடுத்து பாலில் கலந்து , முகத்தில் பூசி 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால் , முகம் கருக்காமலும், வேர்க்குரு வராமலும் இருக்கும்.
முகத்தில் உள்ள கருமை மறைய, திராட்சை பழச்சாறை பிழிந்து எடுத்த பின் மீதம் உள்ள சக்கையை தூக்கி எறியாமல் அதை முகத்தில் ஃபேஸ் மாஸ்க் போன்று பூசி சிறிது நேரத்திற்கு பின் கழுவ வேண்டும். திராட்சை சாற்றில் அதிக அளவு ஆன்டி ஆக்சிடன்ட்கள் உள்ளது. இது உங்கள் சருமத்தில் உள்ள அழுக்கை போக்கி, இரத்தத்தில் உள்ள பிளேட்டிலெட்டுகளை அதிகரிக்கிறது.
தக்காளி மற்றும் ஆப்பிள் பழ விழுது ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து , பஞ்சில் முக்கி முகத்தில் ஒற்றி எடுத்தால் முகம் நல்ல மினுமினுப்பாகவும் , குளுமையாகவும் இருக்கும். பால், கடலைமாவு, கஸ்தூரி மஞ்சள் மூன்றையும் கலந்து முகத்தில் பூசி வந்தால் சருமம் பொலிவாக இருக்கும்.
ஒரு ஸ்பூன் வெந்தயம், ஒரு ஸ்பூன் கசகசா போட்டு தண்ணீர் ஊற்றி ஊற வைத்து, பின் அதனை அரைத்து அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.
தக்காளிச்சாறு, முல்தானி மிட்டி, கடலைமாவு, கஸ்தூரி மஞ்சள் மூன்றும் கலந்து முகத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வர சருமம் பொலிவுடன் காணப்படும்.
வெள்ளரிக்காயின் சிறிய துண்டை எடுத்து அரைத்து, அதில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் கடலைமாவு சேர்த்து பேஸ்டாக கலந்து முகத்தில் தடவி, சிறிது நேரம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் முகம் பொலிவோடு இருக்கும்.
ரோஸ்வாட்டரில் சிறிது பால் சேர்த்து கலந்து, தினமும் இரவில் படுக்கும் முன் தடவி இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால் முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் வெள்ளையாக பளிச்சென்று மாறும்.
பசும்பாலில் ஒரு தேக்கரண்டி கசகசாவை இரவில் ஊறப்போட்டு காலையில் மைய அரைத்து முகத்தில் தேய்த்து வர, முகம் சிகப்பழகு பெறும்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.