அடர்த்தியான தலைமுடிக்கு காஸ்ட்லியான ப்ராடக்டுகளை தான் பயன்படுத்தனும்னு இல்ல… அந்த பொருள் உங்க வீட்டிலேயே கூட மறைந்து இருக்கலாம்!!!

Author: Hemalatha Ramkumar
29 October 2024, 5:17 pm

உங்களுடைய தலைமுடி வழக்கத்தை விட அதிக வறண்டு காணப்படுகிறதா? அப்படி என்றால் உங்கள் தலைமுடி ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. தலைமுடி பொலிவிழந்து டல்லாக இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். மேலும் இதனால் தலைமுடி உதிர்வு, பொடுகு, ஸ்ப்லிட் எண்டு போன்ற பல பிரச்சனைகள் ஏற்படலாம். காரணம் என்னவாக இருந்தாலும் உங்களுடைய தலைமுடியின் அடர்த்தி மற்றும் அதன் பளபளப்பை இழப்பது என்பது மோசமான ஒரு விஷயம். ஆனால் இதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் வீட்டு சமையல் அறையில் இருக்கும் பொருட்களை வைத்து இதற்கான தீர்வை பெற்றுக் கொள்ளலாம். அப்படி உங்களுடைய தலைமுடி ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் சில விரைவான வீட்டு சிகிச்சைகளை பற்றி தெரிந்து கொள்வோம். 

கற்றாழை சாறு

கற்றாழையில் தலைமுடியை ஆற்றும் பண்புகள் மற்றும் நீர்ச்சத்து அதிகமாக இருக்கிறது. இது தலைமுடியின் பளபளப்பை மேம்படுத்துகிறது. இதில் உள்ள என்சைம்கள் தலைமுடியின் வளர்ச்சியை அதிகரித்து, தலைமுடி உதிர்வை தடுக்கிறது. அது மட்டுமல்லாமல் இது தலைமுடி அடர்த்தியாக மாறுவதற்கு உதவுகிறது. இதற்கு நீங்கள் ஒரு கற்றாழை மடலில் இருக்கும் சாற்றை எடுத்து அந்த ஜெல்லை நேரடியாக உங்களுடைய தலைமுடி மற்றும் மயிர் கால்களில் தடவ வேண்டும். 30 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து விட்டு பின்னர் குளிர்ந்த தண்ணீரில் தலை முடியை அலசுங்கள். இதனை வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை செய்யலாம். ஒரு சிலருக்கு கற்றாழை அரிப்பு அல்லது சிவத்தலை ஏற்படுத்தலாம். எனவே இதனை பயன்படுத்துவதற்கு முன்பு பேட்ச் சோதனை செய்து பார்ப்பது அவசியம். 

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் தலைமுடியில் ஆழமாக ஊடுருவி அதற்கு தேவையான ஈரப்பதம், போஷாக்கு மற்றும் தடிமனை அளிக்கிறது. இயற்கையான கண்டிஷனர் போல செயல்பட்டு சேதமடைந்த தலைமுடி மீண்டும் வளர்வதற்கு உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் தலைமுடி போஷாக்கு அவசியமான புரோட்டீன்கள் தேங்காய் எண்ணெயில் உள்ளதால் இது சேதமடைந்த தலைமுடியை விரைவாக சரி செய்கிறது. இதற்கு நீங்கள் சிறிதளவு தேங்காய் எண்ணெயை தீயில் வாட்டி அது வெதுவெதுப்பானவுடன் அதனை உங்களுடைய தலைமுடி மற்றும் மயிர் கால்களில் தடவி லேசாக மசாஜ் செய்யுங்கள். இரவு முழுவதும் இதனை அப்படியே விட்டுவிட்டு பிறகு காலையில் மைல்டான ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலசுங்கள். இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை செய்யலாம். 

இதையும் படிக்கலாமே: குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் எளிமையான பயிற்சிகள்!!!

முட்டையின் மஞ்சள் கரு முட்டையின் மஞ்சள் கருவில் முழுக்க முழுக்க புரோட்டின் நிறைந்துள்ளது. இது தலைமுடியின் வளர்ச்சி மற்றும் அது தடிமனாக மாறுவதற்கு மிகவும் அவசியம். முட்டையை சாப்பிடுவது உங்களுடைய தலைமுடி ஆரோக்கியத்தை அதிகரிக்கும். அதேபோல தலைமுடி முட்டையின் மஞ்சள் கரு மற்றும் வெள்ளையை உங்கள் தலைமுடிக்கு நேரடியாக பயன்படுத்தினாலும் அதன் பலனை பெறலாம். இதற்கு முட்டையின் மஞ்சள் கருவை ஒரு ஸ்பூன் வைத்து நன்றாக அடித்து உங்கள் தலைமுடி மற்றும் மயிர் கால்களில் தடவவும். 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த தண்ணீரில் அலசுங்கள். முட்டையின் மஞ்சள் கரு தலைமுடியில் ஒருவித வாசனையை ஏற்படுத்தும் என்பதால் நீங்கள் தலைமுடியை இரண்டு மூன்று முறை ஷாம்பு கொண்டு அலச வேண்டியிருக்கும். இந்த சிகிச்சையை நீங்கள் வாரத்திற்கு ஒருமுறை செய்து பாருங்கள்.

ஆலிவ் எண்ணெய் 

தலை முடியை அடர்த்தியாக மாற்றி அதனை பளபளக்கச் செய்வதற்கான மற்றொரு வீட்டு சிகிச்சை ஆலிவ் எண்ணெய். இது தலைமுடியில் ஊடுருவி அதற்கு தேவையான ஈரப்பதத்தை அளிக்கிறது. மேலும் தலைமுடியை மென்மையாக்கி ஃபிரிஸ் பிரச்சனையை போக்குகிறது. ஆலிவ் எண்ணெயில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்கள் தலைமுடியை சுற்றுச்சூழல் காரணிகளிடமிருந்து பாதுகாக்கிறது. தலை முடிக்கு தேவையான போஷாக்கை அளித்து ஆழமான கண்டிஷனிங் விளைவை ஆலிவ் எண்ணெய் தருகிறது. இதற்கு வெதுவெதுப்பான ஆலிவ் எண்ணெயை தலைமுடியில் தடவவும். குறிப்பாக முனைகளில் தடவுவதற்கு மறக்காதீர்கள். பின்னர் உங்களுடைய தலைமுடியை ஒரு ஷவர் கேப் கொண்டு மூடிவிட்டு இரவு முழுவதும் அப்படியே விடலாம். காலை வழக்கமாக நீங்கள் உபயோகிக்கும் ஷாம்பு மற்றும் கண்டிஷனரை பயன்படுத்துங்கள். 

  • Allu Arjun controversy Pushpa 2 அல்லு அர்ஜுன் 20 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் …அமைச்சரின் பேட்டியால் பரபரப்பில் தெலுங்கானா..!
  • Views: - 444

    0

    0