மன அழுத்தம் காரணமாக ஏற்படும் முடி உதிர்வுக்கான சிறந்த தீர்வுகள்!!!
Author: Hemalatha Ramkumar20 April 2023, 6:36 pm
இன்று மன அழுத்தம் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வாட்டி எடுக்கும் ஒரு விஷயமாக உள்ளது. பள்ளியில் சிறந்து விளங்க வேண்டும் என்று குழந்தைகளும், வேலை மற்றும் குடும்பத்தை கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற மன அழுத்தம் பெரியவர்களுக்கும் இன்று அதிக அளவில் காணப்படுகிறது. மன அழுத்தம் என்பது பலவிதமான பிரச்சனைகளை உடன் கொண்டு வருகிறது. அந்தப் பிரச்சினைகளில் ஒன்று தான் முடி உதிர்வு. மன அழுத்தம் இருக்கும் பலர் முடி உதிர்வை அனுபவிப்பதாக கூறுகின்றனர். மன அழுத்தம் என்பது முடி உதிர்வை ஏற்படுத்தி முடி வளர்ச்சியில் தாக்கத்தை உண்டாக்குகிறது. இந்த பதிவில் மன அழுத்தத்தினால் ஏற்படும் முடி உதிர்வை சமாளிக்க உதவும் ஒரு சில வீட்டு வைத்தியங்கள் குறித்து பார்க்கலாம்.
முடி உதிர்வு காண முதல் தீர்வாக தேங்காய் எண்ணெய் அமைகிறது தேங்காய் எண்ணெயில் காணப்படும் கொழுப்பு அமிலங்கள் தலைமுடிக்கு ஊட்டச்சத்து அளித்து ஈரப்பதத்தை சேர்க்கிறது மேலும் தேங்காய் எண்ணெயில் காணப்படும் ஆண்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி பங்கள் பண்புகள் மயிர்கால்களின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்கிறது வரண்ட மற்றும் சேதமடைந்த முடியை கொண்ட பெண்கள் தேங்காய் எண்ணெயை தங்கள் தலைமுடி மற்றும் மயிர்கால்களில் தடவி மசாஜ் செய்து 30 நிமிடங்கள் ஊறவைத்த பின்பு தலை முடியை லேசான ஷாம்பு கொண்டு கழுவி பெற நல்ல முடிவு கிடைக்கும்
அடுத்தபடியாக கற்றாழை முடி வளர்ச்சியை ஊக்குவித்து முடியை மென்மையாக்க கூடிய பல பண்புகள் கற்றாழையில் உள்ளது உணர்திறன் வாய்ந்த மற்றும் வறண்ட மயிர் கால்களை கொண்ட பெண்களுக்கு கற்றாழை ஜெல் ஒரு சிறந்த இயற்கை கண்டிஷனாராக செயல்படுகிறது கற்றாழை சாற்றை முடி மற்றும் மயிர் கால்களில் தடவி பத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு லேசான ஷாம்புவைக் கொண்டு கழுவவும். இதனை வாரம் ஒரு முறையாவது செய்து வர வேண்டும்
ஆர்கான் எண்ணெயில் அதிக அளவு ஆன்டி ஆக்சிடன்டுகள் மற்றும் வைட்டமின் ஈ காணப்படுகிறது. இது முடியை சேதத்தில் இருந்து பாதுகாத்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. வறண்ட மற்றும் படியாத தலை முடியை கொண்டவர்களுக்கு ஆர்கான் ஆயில் சிறந்த கண்டிஷனர். தலைமுடியை ஷாம்புவை கொண்டு கழுவிய பின்னர் ஆர்கான் ஆயிலை பயன்படுத்த வேண்டும். எனினும் ஆர்கான் எண்ணெய் மயிர்க்கால்களில் படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
அடுத்த வீட்டு வைத்தியமாக காணப்படும் வெங்காய சாற்றில் அதிக அளவு சல்பர் காணப்படுகிறது. இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி முடி வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது. இதற்கு தலைமுடி மற்றும் மயிர் கால்களில் நேரடியாக வெங்காய சாற்றை தடவி 30 நிமிடங்கள் ஊறவைத்து ஷாம்புவை கொண்டு தலை முடியை அலசலாம்.
மயிர் கால்களை மசாஜ் செய்வது மன அழுத்தம் காரணமாக ஏற்படும் முடி உதிர்வை சமாளிக்க உதவும். மசாஜ் செய்வதால் தலைமுடிக்கு செல்லும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் முடி வளர்ச்சி ஊக்குவிக்கப்படும். அதோடு ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு சமச்சீரான உணவும் அவசியம். உங்கள் உணவில் போதுமான அளவு புரதச்சத்து, வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் சேர்ப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இவற்றை செய்வதன் மூலமாக முடி உதிர்வை சமாளித்து முடி வளர்ச்சியை அதிகரிக்கலாம்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.