ஒரு ரூபா செலவு இல்லாம உங்க தலைமுடிய ஸ்ட்ராங்கா, சாஃப்டா மாத்துவோமா…???

Author: Hemalatha Ramkumar
14 October 2024, 5:10 pm

இன்றைய நவீன உலகில் பலர் தங்களை அழகுபடுத்திக் கொள்வதற்கு கடைகளில் விற்பனை செய்யப்படும் பல்வேறு விதமான விலை அதிகமுள்ள அழகு சாதன பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் உண்மையில் குறைந்து செலவிலோ அல்லது செலவே இல்லாமலே நமது வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லாமல் நாம் நினைத்த மாதிரியான சருமம் மற்றும் தலைமுடி ஆரோக்கியத்தை பெறலாம் என்பது பலருக்கு தெரிவதில்லை. 

அப்படி பார்க்கும்போது அரிசியை ஊற வைத்த தண்ணீர் கூட சருமத்திற்கும், தலைமுடிக்கும் பல மாயாஜாலங்களை செய்கிறது. வழக்கமாக அரிசியை ஊற வைத்த தண்ணீரை வடித்து அதனை கீழே ஊற்றி விடுவோம். ஆனால் இந்த பதிவை படித்த பிறகு இனியும் அப்படி செய்ய மாட்டீர்கள். அரிசி கழுவிய தண்ணீர் அல்லது அரிசி வடித்த கஞ்சியில் ஏகப்பட்ட மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளது. 

இவை நம்முடைய தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு அவசியமான ஊட்டச்சத்துக்கள். பல வருடங்களாக பெண்கள் நீளமான மற்றும் ஆரோக்கியமான தலைமுடிக்கு இந்த அரிசி கழுவிய தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர். சேதமடைந்த தலைமுடியை கூட இந்த அரிசி கழுவிய தண்ணீரால் சரி செய்ய முடியும். அமினோ அமிலங்கள் நிறைந்த அரிசி கழுவிய தண்ணீர் உங்கள் தலைமுடி வேர்களை வலிமையாக்குகிறது. மேலும் தலைமுடியை மென்மையாக்கி, அதற்கு பளபளப்பை சேர்க்கிறது. 

இதற்கு நீங்கள் வெள்ளை அரிசி அல்லது பழுப்பு நிற அரிசியாகிய இரண்டையுமே பயன்படுத்தலாம். முதலில் அரிசியை சுத்தமாக அழுக்கு அல்லது கெமிக்கல்கள் இல்லாமல் கழுவி விட்டு பிறகு குளிர்ந்த நீரில் அதனை ஊற வைக்கவும். இரண்டு கப் தண்ணீரில் இரண்டு டேபிள் ஸ்பூன் அரிசி சேர்த்தால் போதுமானது. இது 30 நிமிடங்கள் ஊறிய பிறகு அரிசியை வடிகட்டி விட்டு அந்த தண்ணீரை உங்களுடைய தலைமுடிக்கு பயன்படுத்தலாம். இதே தண்ணீரை நீங்கள் புளிக்க வைத்தும் பயன்படுத்தலாம். அதற்கு அரிசி மற்றும் தண்ணீரை 24 மணி நேரத்திற்கு அப்படியே ஊற வைக்க வேண்டும். 

இது லேசான துர்நாற்றத்தை அளிக்கலாம். அதிலிருந்து தப்பிப்பதற்கு நீங்கள் சிறிதளவு லாவண்டர் எசென்ஸ் சேர்த்துக் கொள்ளலாம். 24 மணி நேரம் கழித்து அரிசியை வடிகட்டி தண்ணீரை எடுத்து அதில் சிறிதளவு வெதுவெதுப்பான நீர் சேர்த்து தலை முடிக்கு பயன்படுத்துங்கள். இதற்குப் பிறகு நீங்கள் உங்கள் தலைமுடியை வழக்கமான ஷாம்பு மற்றும் கண்டிஷனர் பயன்படுத்தி கழுவலாம். அதிலிருந்து வரும் வாடை உடனடியாக போகாது என்பதால் தலைமுடியை ஒன்று முதல் இரண்டு முறை கழுவுங்கள். தலைமுடிக்கு அரிசி தண்ணீர் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகளை  ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

இதையும் படிக்கலாமே: நைட் டைம்ல இரத்த சர்க்கரை அதிகமாகாம இருக்க என்ன செய்யணும்…???

அரிசி கழுவிய தண்ணீரில் உள்ள அத்தியாவசிய வைட்டமின்கள் தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. 

சேதமடைந்த தலைமுடியை சரி செய்து மேலும் சேதம் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது. 

அரிசி கழுவிய தண்ணீர் தலைமுடியின் மயிர்க்கால்களை வலிமையாக்குகிறது. 

இதனை அடிக்கடி பயன்படுத்தி வந்தால் உங்களுடைய தலைமுடி மென்மையாக மாறும். 

பொடுகு பிரச்சனை இருப்பவர்களுக்கு அரிசி கழுவிய தண்ணீர் சிறந்த தீர்வு தருகிறது. 

பேன் தொல்லையில் இருந்து விடுபடுவதற்கும் அரிசி கழுவிய தண்ணீரை பயன்படுத்தலாம். 

இந்த தண்ணீர் ஒரு சிறந்த ஹேர் கண்டிஷனராக செயல்படுகிறது. 

அரிசி கழுவிய தண்ணீரோடு உங்களுக்கு பிடித்தமான அத்தியாவசிய எண்ணெயை சேர்த்து அதன் பிறகு உங்கள் தலைமுடியில் தடவலாம். இது உங்கள் தலைமுடியை இன்னும் மென்மையாக மாற்றும். 

ஒருவேளை உங்களுக்கு மெல்லிய தலைமுடி இருந்தால் நீங்கள் நிச்சயமாக அரிசி கழுவிய தண்ணீரை பயன்படுத்தியே ஆக வேண்டும். அது உங்களுடைய தலைமுடி அடர்த்தியை அதிகமாக்கும்.

நமது வீட்டில் கிடைக்கும் இந்த மாதிரியான இயற்கை பொருட்களை தலைமுடி மற்றும் சருமத்திற்கு பயன்படுத்துவது மிகவும் நல்லது. இவற்றில் இருந்து பெறப்படும் முடிவுகள் சற்று தாமதமாக கிடைத்தாலும் அது நிரந்தரமானதாகவும், எந்த ஒரு பக்க விளைவுகள் இல்லாததாகவும் இருக்கும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Vijay Deverakonda and Rashmika Mandanna relationship ராஷ்மிகா போட்ட கண்டிஷன்..திருமணத்தை உதறிய விஜய் தேவரகொண்டா..!
  • Views: - 393

    0

    0