இந்த விதைகளை சாப்பிட்டா போதும்… நீங்களே நினைத்தாலும் உங்க தலைமுடி வளர்ச்சியை ஸ்டாப் பண்ண முடியாது…!!!

Author: Hemalatha Ramkumar
24 September 2024, 10:47 am

நீங்கள் எவ்வளவு விலை உயர்ந்த தலைமுடி பராமரிப்பு ப்ராடக்டுகளை வாங்கி பயன்படுத்தினாலும் சரி உங்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் நிச்சயமாக உங்களால் அதன் மூலமாக சிறந்த முடிவுகளை பெற முடியாது. ஊட்டச்சத்து குறைபாடு என்பது தலைமுடியின் வளர்ச்சி மற்றும் அதன் அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் தலைமுடி இழப்பு, பொடுகு, பிளவு முனைகள் போன்றவற்றுக்கு இடையில் தொடர்பு இருப்பது ஆய்வுகள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே உங்களுடைய தலைமுடியின் ஆரோக்கியத்தை ஊக்குவிப்பதற்கு நீங்கள் சாப்பிட வேண்டிய சில விதைகள் என்னென்ன என்பதை பார்ப்போம். 

பொதுவாக விதைகள் என்பது ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக அமைகிறது. அவை தலைமுடியின் வளர்ச்சி மற்றும் போஷாக்கு அவசியமானவை. இந்த விதைகளில் வைட்டமின்கள், மினரல்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், இரும்புச்சத்து, புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. 

ஆளி விதைகள் 

ஆளி விதைகளில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மயிர் கால்களின் ஆரோக்கியம் மற்றும் முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. ஆகவே இதனை உங்களுடைய அன்றாட உணவில் சேர்த்து சாப்பிடுவதன் மூலமாக பயன் பெறலாம். 

சியா விதைகள் 

சியா விதைகளும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களின் சிறந்த மூலம். அது மட்டுமல்லாமல் இதில் நார்சத்தும் உள்ளது. சியா விதைகளை உங்களின் காலை பானங்களில் சேர்த்து சாப்பிடுவது பலன் அளிக்கும். 

சூரியகாந்தி விதைகள்

Hair growth Health Tips Tamil

லினோலினிக் அமிலம், ஓலிக் அமிலம், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்து ஆகியவை நிறைந்த சூரியகாந்தி விதைகள் மயிர்க்கால்களில் தூண்டி தலைமுடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

எள் விதைகள் 

கால்சியம், மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ள எள் விதைகள் தலைமுடியின் அமைப்பை மேம்படுத்துவதற்கு பெயர் போனது. இது தலைமுடி வறட்சி மற்றும் தலைமுடி அடிக்கடி உடைந்து போகும் தலைமுடி சார்ந்த பிரச்சினைகளுக்கு சிறந்த முறையில் தீர்வு தருகிறது. எள் விதைகள் மயிர்க்கால்களுக்கு தேவையான போஷாக்கை வழங்குவதன் மூலமாக தலைமுடி வளர்ச்சியை விரைவாக்குகிறது. 

இந்த விதைகளை உங்களுடைய அன்றாட வழக்கத்தில் எவ்வாறு சேர்ப்பது? 

சாலட், ஓட்ஸ், ஸ்மூத்தி மற்றும் தயிர் போன்றவற்றை சாப்பிடும் பொழுது இந்த விதைகளை மேலே தூவி சாப்பிடலாம். 

இதனை வறுத்தோ அல்லது பச்சையாகவோ ஸ்நாக்ஸ் ஆக மாலை நேரத்தில் சாப்பிடலாம். 

வீட்டில் கஞ்சி செய்யும் போது இந்த விதைகளை சேர்த்து சாப்பிடலாம். அது மட்டுமல்லாமல் இந்த விதைகளாலான எண்ணெயை பயன்படுத்துவதும் பயனளிக்கும். இந்த எண்ணெய்களை கொண்டு தலைக்கு குளிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு 5 நிமிடங்கள் இந்த எண்ணெயை தடவி மசாஜ் செய்து பின்னர் குளித்து வர நல்ல பலன் பெறலாம். எனினும் இந்த விதைகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான விளைவுகளை அளிக்கும். மேலும் இதனால் ஒரு சில பக்க விளைவுகளும் ஏற்படலாம். ஆகவே உங்கள் தலைமுடி உதிர்வுக்கு பின்னணியில் உள்ள காரணங்களை கண்டறிந்து இந்த விதைகள் மூலம் கிடைக்கும் பலன்கள் மற்றும் பக்க விளைவுகளை தெரிந்து கொள்வதற்கு தலைமுடி நிபுணரை அணுகுவது நல்லது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Surya Clash With Ajith அஜித்துக்கு எதிராக களமிறங்கும் சூர்யா.. ஒரு கை பார்க்க முடிவு!!
  • Views: - 350

    0

    0