தீபாவளி வரப்போகுது… ஃபெஸ்டிவ் லுக் பெறுவதற்கு பின்பற்ற வேண்டிய சரும பராமரிப்பு வழக்கம்!!!

Author: Hemalatha Ramkumar
27 September 2024, 10:05 am

இன்னும் ஒரு மாதத்தில் தீபாவளி வர இருப்பதால் அதற்கான ஏற்பாடுகளை நாம் இப்பொழுது இருந்தே ஆரம்பித்தால் சரியாக இருக்கும். ஆனால் வீட்டை தயார் செய்வது ஷாப்பிங் போன்றவற்றிற்கு மத்தியில் உங்களுடைய சரும பராமரிப்பை மறந்து விடாதீர்கள். பண்டிகை அன்று ஜொலிப்பதற்கும் முகத்தில் எந்த ஒரு குறைபாடும் இல்லாதவாறு தயாராவதற்கும் உங்களுடைய அன்றாட வழக்கத்தில் நீங்கள் ஒரு சில விஷயங்களை சேர்க்க வேண்டும். அதற்கான சில சரும பராமரிப்பு குறிப்புகளை இப்பொழுது பார்ப்போம். 

சுத்தம் செய்தல் 

உங்களுடைய சருமத்தை பண்டிகைக்கு தயார் செய்வதற்கு தினமும் அதனை சுத்தம் செய்வது முக்கியம். ஒரு மென்மையான கிளன்சரை பயன்படுத்தி தினமும் குறைந்தபட்சம் இரண்டு முறை உங்கள் சருமத்தில் உள்ள அழுக்குகள், மேக்கப் போன்றவற்றை அகற்றுங்கள். இது உங்கள் சருமத்தில் முகப்பருக்கள் மற்றும் சரும துளைகளில் அடைப்பு ஏற்படுவதை தவிர்க்க உதவும். 

பண்டிகைக்கு மினுமினுப்பான சருமத்தோடு தயாராவதற்கு எக்ஸ்ஃபோலியேஷன்

சருமத்தை எக்ஸ்ஃபோலியேட் செய்வது மிகவும் அத்தியாவசியமான ஒரு சரும பராமரிப்பு. சர்க்கரை-எலுமிச்சை சாறு, ஓட்ஸ்-தேன் அல்லது காபி பவுடர் போன்ற வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி சரும துளைகளை சுத்தமாக்குங்கள். ஒரு வாரத்தில் குறைந்தபட்சம் 2 முதல் 3 முறை இவ்வாறு செய்து வர பளபளப்பான சருமத்தை பெறலாம். 

சருமத்தை பொலிவாக்கும் ஃபேஷியல்

மினுமினுப்பான சருமத்தை அடைவதற்கு ஸ்கின் பிரைட்டனிங் ஃபேஷியல் பயன்படுத்துங்கள். சருமத்தை வெண்மையாக்க உதவும் இந்த ஏஜெண்டுகள், மென்மையான எக்ஸ்ஃபோலியண்டுகள் மற்றும் மாஸ்குகள் சருமத்தின் பொலிவிழந்த தன்மை மற்றும் ஹைப்பர் பிக்மென்டேஷனை அகற்றுகிறது. எனவே ஒரு மாதத்திற்கு ஒருமுறை ஒரு எளிமையான ஃபேஷியல் செய்து கொள்வது நல்லது. 

நீர்ச்சத்து முக்கியம்

பண்டிகைக்காக உங்களுடைய தோலை தயார் செய்வது என்பது உள்ளிருந்து ஆரம்பிக்க வேண்டும். எனவே உங்களுடைய செல்களை ஹைட்ரேட் செய்யவும், அதற்கு பொலிவான அமைப்பை கொடுக்கவும் அதிக அளவு தண்ணீர் பருகுங்கள். மென்மையான மற்றும் பொலிவான சருமத்திற்கு தினமும் 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் குடிப்பதை உறுதிப்படுத்துங்கள். 

நல்ல உறக்கம் 

தொடர்ச்சியாக நீங்கள் தினமும் போதுமான அளவு தூங்குவது உங்களுடைய சரும செல்களை மீட்டமைத்து கண்களைச் சுற்றியுள்ள கருவளையத்தை போக்கி கொலாஜன் உற்பத்தியை தூண்டும். தரமான தூக்கம் ஹார்மோன்களை சீராக்கி, மன அழுத்தத்தை போக்கி, பொலிவான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் சருமத்தை அளிக்கும். 

ஃபேஸ் மாஸ்க்

இயற்கையான பொருட்களைக் கொண்டு உங்கள் சருமத்தை ஆற்றுங்கள். ஏதாவது ஒரு DIY ஃபேஸ் மாஸ்க்கை வாரத்தில் குறைந்தபட்சம் 1 முதல் 2 முறை பயன்படுத்துங்கள். இது விலை மலிவானது மற்றும் கெமிக்கல்கள் இல்லாதது. 

சரிவிகித உணவு

ஆன்டி-ஆக்சிடன்ட்கள், ஒமேகா 3 மற்றும் வைட்டமின்கள் C மற்றும் E அடங்கிய சரிவிகித உணவு ஆரோக்கியமான மற்றும் பொலிவான சருமத்தை அளிக்கிறது. இந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் சருமத்திற்கு தேவையான நீர்ச்சத்து மற்றும் நெகிழ்வுத் தன்மையை அளித்து அதனை பளபளப்பாக மாற்றும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Surya Retro Movie OLD BUT MASS..சூர்யா 44 படத்தின் மிரட்டலான டைட்டில்…சம்பவம் செய்த டீசர்.!
  • Views: - 335

    0

    0