இத மட்டும் தெரிஞ்சுகிட்டா போதும்… வீட்லயே ஈசியா ஃபேஸ் ஷீட் மாஸ்க் ரெடி பண்ணிடலாம்!!!

Author: Hemalatha Ramkumar
12 அக்டோபர் 2024, 1:04 மணி
Quick Share

தூசு, மாசு, சூரியனின் UV கதிர்கள் போன்றவற்றிற்கு தொடர்ச்சியாக நம்முடைய தோலை வெளிப்படுத்துவதால் அது நீரற்றமாக இருப்பதற்கும், பொலிவாக காட்சியளிப்பதற்கும் கூடுதல் பராமரிப்பு தருவது அவசியம். இதற்காகவே கடைகளில் ஷீட் மாஸ்க் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ஷீட் மாஸ்கை இயற்கையான பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே நாம் தயார் செய்யலாம். இது இயற்கையாக தயாரிக்கப்படுவதால் இதில் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் கெமிக்கல்கள் எதுவும் இருக்காது. இதனால் உங்கள் சருமத்திற்கு ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமோ என்பது குறித்து நீங்கள் கவலைப்பட தேவையில்லை. இப்போது பொலிவான மற்றும் நீரேற்றம் அடங்கிய ஃபேஸ் ஷீட் மாஸ்க் எப்படி செய்வது என்பது பார்க்கலாம். 

வெள்ளரிக்காய் மற்றும் கற்றாழை ஷீட் மாஸ்க் 

இந்த மாஸ்க் செய்வதற்கு வெள்ளரிக்காயை கழுவி துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீராக அரைத்துக் கொள்ளவும். இந்த வெள்ளரிக்காய் சாற்றோடு சிறிதளவு கற்றாழையை சேர்த்து நன்றாக கலக்கவும். இப்போது ஒரு காட்டன் ஷீட் மாஸ்க் அல்லது பேடுகளை எடுத்து இந்த கலவையில் முக்கி எடுத்து உங்கள் முகத்தில் வைத்து 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். இந்த மாஸ்க் உங்கள் சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை அளித்து, எரிச்சலைப் போக்கி பளபளப்பான அமைப்பை கொடுக்கும். 

கிரீன் டீ மற்றும் தேன் ஷீட் மாஸ்க்

 

இந்த ஷீட் மாஸ்க் செய்வதற்கு முதலில் கிரீன் டீ தயாரித்து அதனை ஆற வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த கிரீன் டீயில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு தேன் சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர் காட்டன் ஷீட் மாஸ்கை இந்த கலவையில் முக்கி எடுத்து முகத்தில் வைத்து 15 நிமிடங்கள் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இந்த மாஸ்க் உங்கள் சருமத்தை மென்மையாக்கி அதற்கு தேவையான போஷாக்கை அளிப்பதால் மினுமினுப்பான சருமத்தை பெறலாம். 

இதையும் படிக்கலாமே: மச்சம் கூட புற்றுநோயா மாறுமா… அத எப்படி கண்டுபிடிக்கிறது…???

பால் மற்றும் ரோஸ் வாட்டர் ஷீட் மாஸ்க்

மூன்றாவதாக நாம் பார்க்க இருக்கும் பால் மற்றும் ரோஸ் வாட்டர் ஷீட் மாஸ்க் செய்வதற்கு ஒரு சிறிய கிண்ணத்தில் பால் மற்றும் ரோஸ் வாட்டரை சம அளவு எடுத்து கலந்து கொள்ளவும். காட்டன் ஷீட் மாஸ்கை இந்த கலவையில் முக்கி முகத்தில் வைத்து 15 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு பின்னர் முகத்தை கழுவவும். இதன் மூலமாக உங்கள் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அகற்றப்பட்டு, சருமத்திற்கு உடனடி நீர்ச்சத்து கிடைத்து சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் மாறும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • ரூ.411 கோடி அரசு நிலம் அபேஸ்? அறப்போர் இயக்கம் கைகாட்டும் அமைச்சர்!
  • Views: - 132

    0

    0

    மறுமொழி இடவும்