வீட்டிலே ஹேர் பேக் செய்து பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு!!!!
Author: Hemalatha Ramkumar20 March 2023, 7:15 pm
நீங்கள் வீட்டிலே ஹேர் மாஸ்க் செய்து பயன்படுத்துவது நல்ல விஷயம் தான். ஆனால் அதனை பயன்படுத்துவதற்கென சில விதிகள் உள்ளன. அது குறித்து இந்த பதிவில் காணலாம். இவற்றை பின்பற்றினால் தான் உங்கள் ஹேர் பேக் மூலமாக அதிகபட்ச பலன்களை நீங்கள் அடையலாம்.
முதலில் உங்கள் தலைமுடியின் அடர்த்தியைப் பொறுத்து உங்கள் தலைமுடியை இரண்டு முதல் நான்கு பகுதிகளாகப் பிரிக்கவும். உங்கள் ஹேர் மாஸ்க் முடியின் வேர் வரை செல்வதை உறுதிப்படுத்தி கொள்ளவும். முடியின் வேர் முதல் நுனி வரை ஹேர் பேக்கை பயன்படுத்துங்கள்.
பெரும்பாலான முடி ஹேர் பேக்குகளை 5-15 நிமிடங்கள் வைத்திருந்தாலே போதும்.
உங்கள் ஹேர் மாஸ்க் தேவையான நேரம் உங்கள் முடியில் வைத்திருந்த பிறகு, உங்கள் தலைமுடியிலிருந்து அதனை முழுவதுமாக அகற்ற குளிர்ந்த நீரைப் பயன்படுத்துங்கள்.
ஏனெனில் இது உங்கள் தலைமுடி உதிர்வதைக் குறைக்க உதவுகிறது மற்றும் உங்கள் முடி உலர்த்திய பின் மென்மையாக இருக்க உதவுகிறது. அடுத்த முறை நீங்கள் ஹேர் மாஸ்க்கைப் பயன்படுத்தும்போது இந்த டிப்ஸ்களை பின்பற்றி பாருங்கள். நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.