பொதுவாக அதிகப்படியாக புகை பிடிப்பவர்களின் உதடுகள் கருமையாக இருக்கும். ஆனால் புகை பிடிக்காதவர்களின் உதடுகள் கூட கருமையாக இருப்பதற்கு காரணம் என்னவாக இருக்கும். உதடுகள் என்பது பல்வேறு நிறங்கள், அளவுகள் மற்றும் வடிவங்களில் உள்ளது. சிகரெட்டை தொடாத நபர்களின் உதடுகள் கூட கருமையாகவும், பிக்மென்டேஷன் இருப்பதையும் நம்மால் பார்க்க முடிகிறது. ஒருவேளை உங்களுடைய உதடுகளை வீட்டில் இருந்தபடியே இயற்கையாக சிவப்பாக மாற்ற வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டால் உங்களுக்கான சில குறிப்புகள் இதோ.
ரோஜா இதழ்கள்
கருமையான உதடுகளை சிகப்பாக மாற்றுவதற்கு பில்லியன் கணக்கான இயற்கையான தீர்வுகளை நீங்கள் கண்டுபிடித்தாலும் நிச்சயமாக அது எதுவுமே நிரந்தரமான தீர்வை உங்களுக்கு அளிக்காது. ஆனால் இந்த ரோஜா இதழ்களை நீங்கள் தொடர்ச்சியாக பயன்படுத்தும் பொழுது பிக்மென்டேஷன் அனைத்தும் அகற்றப்பட்டு உங்கள் உதடுகளுக்கு இயற்கையான சிவப்பு நிறம் கிடைக்கும். இதற்கு நீங்கள் சில ரோஜா இதழ்களை ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். ரோஜா இதழ்களின் சாறு அனைத்தும் தண்ணீரில் இறங்கும் வரை காத்திருக்கவும். இந்த செயல்முறையை விரைவாக்க நீங்கள் சிறிதளவு ரோஸ் வாட்டர் கூட பயன்படுத்தலாம். பின்னர் இதனை ஆற வைத்து இரவு படுக்க செல்லும் பொழுது உங்கள் உதடுகளில் தடவி அப்படியே விட்டுவிடுங்கள். இந்த சிகிச்சையை நீங்கள் நீண்ட நாட்களுக்கு செய்யும் பொழுது அது உங்களுக்கு நிரந்தர முடிவுகளை அளிக்கும்.
சர்க்கரை ஸ்க்ரப்
உங்கள் உதடுகளில் உள்ள இறந்த சரும செல்களை அகற்றி அதன் சிகப்பழகை வெளிக்கொண்டுவதற்கு அதனை நீங்கள் மென்மையாக எக்ஸ்ஃபோலியேஷன் செய்ய வேண்டும். இதற்கு நீங்கள் வீட்டில் சர்க்கரை மற்றும் எண்ணெயை கலந்து ஒரு ஸ்க்ரப்பை தயாரிக்கலாம். இனிப்பான பாதாம் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை பயன்படுத்துங்கள். இந்த கலவையை உங்கள் உதடுகளில் தடவி பொறுமையாக ஸ்க்ரப் செய்யவும். பின்னர் தண்ணீர் கொண்டு வாயை கழுவி விட்டு லிப் பாம் பயன்படுத்தவும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் நிச்சயமாக உங்களுக்கு சிகப்பான உதடுகள் கிடைக்கும்.
பீட்ரூட்
பீட்ரூட்டில் நிறைந்துள்ள இயற்கையான பிக்மென்டேஷன் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் உங்கள் உதடுகளுக்கு சிவப்பு நிறத்தை மட்டுமல்லாமல் அதனை குண்டாகவும் காட்சியளிப்பதற்கு உதவும். தினமும் நீங்கள் பீட்ரூட் சாற்றை நேரடியாக உங்களுடைய உதடுகளில் தடவி வரலாம் அல்லது பீட்ரூட் சாறுடன் தேங்காய் எண்ணெய் அல்லது ஷியா வெண்ணை கலந்து தடவலாம். தொடர்ந்து இதை நீங்கள் செய்து வரும் பொழுது உங்களுக்கான ரிசல்ட் கட்டாயமாக கிடைக்கும்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.