ஹேர் கலரிங் செய்துள்ளீர்களா… நீண்ட நாட்கள் கலர் மாறாமல் இருக்க நீங்க ஃபாலோ பண்ண வேண்டிய டிப்ஸ்!!!

Author: Hemalatha Ramkumar
8 November 2022, 4:50 pm

உங்கள் தலைமுடிக்கு ஹேர் கலரிங் செய்ய நீங்கள் நிறைய பணத்தை செலவழித்திருக்கலாம். எனவே கலரிங் செய்து கொண்ட தலைமுடியை நிறத்தை சேதப்படுதாதாமல் எவ்வாறு கழுவுவது மற்றும் பராமரிப்பது என்பது குறித்து உங்களுக்கு பல கேள்விகள் இருக்கலாம். இந்த பதிவில் கலரிங் செய்த தலைமுடியை கவனித்துக் கொள்வதற்கான சில டிப்ஸ் குறித்து பார்ப்போம்.

சல்பேட் இல்லாத ப்ராடக்ட்களைப் பயன்படுத்துங்கள்:
முடி தயாரிப்புகளில் இருக்கும் சல்பேட்டுகள் தண்ணீரில் கலக்கும்போது உங்கள் தலைமுடியில் நுரை உற்பத்திக்கு காரணமாகின்றன. இவை உங்கள் தலைமுடியில் நீரேற்றம், இயற்கை எண்ணெய்கள் மற்றும் ஈரப்பதத்தை அகற்றும். இதனால் நிற இழப்பு ஏற்படுகிறது.

உங்கள் தலைமுடியை தவறாமல் டிரிம் செய்யவும்:
உங்களுக்கு உலர்ந்த பிளவு முனைகள் இருந்தால் முடி நிறம் வேகமாக மங்கிவிடும். எனவே, ஒவ்வொரு மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை தலைமுடியை டிரிம் செய்யவும். உங்கள் தலைமுடியை சுருக்கமாக வெட்ட வேண்டிய அவசியமில்லை, பிளவுபட்ட முனைகளை அகற்றினால் போதும்.

தலைமுடிக்கு பயன்படுத்தும் நீரின் வெப்பநிலை குறித்து கவனமாக இருங்கள்:
வெந்நீர் உங்கள் முடியின் நிறத்தை ஒளிரச் செய்து அதன் அமைப்பைக் கெடுக்கும். எனவே எப்போதும் வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்துங்கள். கண்டிஷனிங் செய்த பிறகு, உங்கள் தலைமுடியை குளிர்ந்த நீரில் கழுவவும். இதனால் தலைமுடிக்கு ஈரப்பதம் கிடைக்கும்.

ஹேர் ஸ்டைலிங் செய்யும் போது கவனமாக இருங்கள்:
வெப்பம் சார்ந்த ஸ்டைலிங் தயாரிப்புகள் உங்கள் முடியின் நிறத்தை கடுமையாக சேதப்படுத்தும். எனவே தினமும் லீவ்-இன் கண்டிஷனர்களைப் பயன்படுத்துவது உங்கள் முடியின் நீரேற்ற அளவை அதிகரிக்கலாம். வெப்பம் சார்ந்த ஸ்டைலிங் செய்யும் போது ஈரப்பதம் இழப்பைத் தவிர்க்க வெப்ப-பாதுகாப்பு ஸ்ப்ரேயைப் பயன்படுத்தவும். இவை உங்கள் தலைமுடியை ஈரப்பதமான காற்றிலிருந்தும் பாதுகாக்கும்.

உங்கள் தலைமுடி அழகாக இருக்க ஆரோக்கியமான உணவைப் பின்பற்றவும்:
ஆரோக்கியமான உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முடி வளர்ச்சி மற்றும் பளபளப்பை மேம்படுத்துவதால், உங்கள் உணவு உங்கள் முடி ஆரோக்கியத்தின் இன்றியமையாத பகுதியாகும். புரதம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் கெரட்டின் உருவாக்குவதன் மூலம் உங்கள் தலைமுடியை வலிமையாக்குகின்றன. இது முடி அமைப்பை மேம்படுத்தவும், முடி வளர்ச்சியைத் தூண்டவும் உதவுகிறது. கொழுப்பில்லாத இறைச்சி, குறைந்த கொழுப்புள்ள பாலாடைக்கட்டிகள், முட்டை, மீன், கீரை, பழங்கள், கொட்டைகள், தானியங்கள், இலை கீரைகள் மற்றும் சோயாபீன் போன்றவற்றை உட்கொள்வது உங்கள் முடியின் நிறத்தை நீண்ட நேரம் அப்படியே வைத்திருக்கும்.

  • Surjith Kumar exits Sandhiya Raagam பிரபல சீரியலில் இருந்து விலகிய நடிகர்…இன்ஸ்டா பதிவால் சோகத்தில் ரசிகர்கள்…!
  • Views: - 670

    0

    0