உடலில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்ற பொதுவாக பயன்படுத்தப்படும் வழிகளில் வேக்சிங் ஒன்றாகும். ஆனால் பணத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்த அதை நீங்களே வீட்டில் முயற்சி செய்யலாம்! பாதுகாப்பான முறையில் வீட்டிலேயே வேக்சிங் எப்படி என்பதை தெரிந்து கொள்வது அவசியம். ஏனெனில், வேக்சிங் சரியான முறையில் செய்யப்பட வேண்டும். ஒரு நிபுணர் இதைச் செய்யும்போது, கவலைப்படத் தேவையில்லை. இருப்பினும் இதை நீங்களே வீட்டில் செய்ய விரும்பினால் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கவனிக் குறைவாக செயல்பட்டால் இது அசௌகரியம் மற்றும் தோல் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
உங்கள் சருமத்தை வேக்சிங் செய்யும் போது நீங்கள் கவனிக்க வேண்டியவை:
எக்ஸ்ஃபோலியேஷன்: வேக்சிங் செய்ய உங்கள் சருமத்தை தயார் செய்வது முக்கியம். உங்கள் சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றுவதற்கான சிறந்த வழி சர்க்கரை ஸ்க்ரப்பைப் பயன்படுத்துவதாகும். சர்க்கரை மற்றும் ஆலிவ் எண்ணெயை ஒன்றாகக் கலந்து சர்க்கரை ஸ்க்ரப் செய்யலாம். ஒரு வட்ட இயக்கத்தில் உங்கள் தோலில் ஸ்க்ரப்பைப் பயன்படுத்துங்கள். பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
முடியை டிரிம் செய்யுங்கள்:
நீங்கள் வேக்சிங் செய்யப் போகும் பகுதியை முதலில் டிரிம் செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இது வேக்சிங்கின் போது முடியை நன்றாக ஒட்டிக்கொள்ளவும், செயல்முறையை மிகவும் மென்மையாக்கவும் உதவும்.
வீட்டில் வேக்சிங் செய்யும் போது தவிர்க்க வேண்டிய 5 தவறுகள்:
1. வேக்சிங் செய்யும் முன்பு உங்கள் சருமத்தை சுத்தம் செய்வதைத் தவிர்க்க வேண்டாம்
2. அதிக மெழுகு பயன்படுத்த வேண்டாம். மெல்லியதான அடுக்கு போதுமானது.
3. மெழுகு முழுவதுமாக காய்வதற்கு முன்பு அதை உரிக்க வேண்டாம் இல்லையெனில் இது தோல் எரிச்சலை ஏற்படுத்தும்
4. ஒரு மாதத்திற்கு ஒரு முறைக்கு மேல் அதே பகுதியை வேக்சிங் செய்ய வேண்டாம்
5. மெழுகு அதிக வெப்பத்தில் இருத்தல் கூடாது. வேக்சிங் பயன்படுத்துவதற்கு முன், அதை அறை வெப்பநிலையில் வைக்கவும்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பெருஞ்சேரியில் 19ஆம் தேதி சுமார் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்…
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியமான வந்திதா பாண்டேவை உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பற்றி…
எகிறிவரும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணி கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்துவிட்டார் அட்லீ. அவர் ஷாருக்கானை வைத்து இயக்கிய…
சினிமாவில் தொடர்ந்து ஜோடியாக நடித்தால் உடனே அவர்களுக்குள் காதல், கிசு கிசு என க்கு வைத்து பேசப்படுவது வழக்கம். ஆனால்…
யதார்த்த சினிமா கோலிவுட்டில் யதார்த்த சினிமா இயக்குனர்களுள் மிகவும் முக்கியமானவராக வலம் வருபவர் வசந்தபாலன். இவர் இயக்கிய “வெயில்”, “அங்காடித்…
This website uses cookies.