கருவளைத்த போக்கி உங்களுக்கு யங் லுக் கொடுக்கும் மஞ்சள் ஐ மாஸ்க்!!!

Author: Hemalatha Ramkumar
9 October 2024, 10:47 am

அதிகப்படியாக மொபைல், கம்ப்யூட்டர், லேப்டாப் மற்றும் பிற கேட்ஜெட்டுகளை பயன்படுத்துவதால் கருவளையம் என்பது இன்று இளைஞர்களிடத்தில் அதிக அளவில் காணப்படுகிறது. ஆண்கள், பெண்கள் என்று அனைவரும் இந்த பிரச்சனையை அனுபவித்து வருகின்றனர். இதனை சரி செய்வதற்கு வாழ்க்கை முறையில் ஒரு சில மாற்றங்களை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்வதும் விரைவில் கருவளையங்களை மறைய செய்யும். அந்த வகையில் நம் அனைவரது வீட்டிலும் எளிமையாக காணப்படும் ஒரு பொருளான மஞ்சள் வைத்து கருவளையத்திற்கு ஒரு அற்புதமான மருந்தை தயார் செய்யலாம்.

இந்த DIY மஞ்சள் ஐ மாஸ்க் தயாரிப்பதற்கு எளிதானது. ஆனால் இதன் மூலமாக கிடைக்கும் பலன்கள் ஏராளம். கருவளையங்கள் மட்டுமல்லாமல் முகத்தில் காணப்படும் மெல்லிய கோடுகள் மற்றும் சோர்ந்த கண்கள் ஆகியவற்றுக்கு இது உடனடி தீர்வாக அமைகிறது. சருமத்தை ஆற்றி அதனை பளபளப்பாகவும், குண்டாகவும், புத்துணர்ச்சியோடும் மாற்றுகிறது. இதில் உள்ள சிறப்பு என்னவென்றால் இந்த நன்மைகள் அனைத்தும் நமக்கு ஒரு சில நிமிடங்களிலேயே கிடைத்து விடுகிறது. இப்போது இந்த ஐ மாஸ்கின் முக்கிய பொருளாக அமையும் மஞ்சளை சருமத்திற்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்பதை விரிவாக பார்க்கலாம். 

மேலும் படிக்க: உங்க தலை முடி பிரச்சனை எல்லாத்தையும் சால்வ் பண்ண கிரீன் டீ பவுடர்!!!

*சருமத்தை வெண்மையாக்கி அதில் உள்ள பிக்மென்டேஷனை குறைத்து, கருவளையங்களுக்கு இயற்கையான தீர்வாக அமைகிறது.

*கண்களை சுற்றி உள்ள வீக்கத்தை போக்கி அதற்கு புத்துணர்ச்சியூட்டும் தோற்றத்தை அளிக்கிறது. 

*மஞ்சளில் ஆற்றும் பண்புகள் இருப்பதால் இது சருமத்தை ஆற்றி, மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்களை அகற்றுகிறது. 

*சருமத்திற்கு சேதம் விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களுடைய சண்டையிட்டு வயதான அறிகுறிகளுக்கு முட்டுக்கட்டை போடுகிறது. 

*இந்த மஞ்சள் கலந்து செய்யப்படும் ஐ மாஸ்கை அடிக்கடி பயன்படுத்துவது உங்கள் சருமத்தை பளிச்சிடு செய்து இளமையான தோற்றத்தை அளிக்கும். 

DIY மஞ்சள் ஐ மாஸ்க் செய்வது எப்படி 

இந்த ஐ மாஸ்க் செய்வதற்கு உங்களுக்கு ஒரு டீஸ்பூன் மஞ்சள் பொடி, ஒரு டேபிள் ஸ்பூன் தயிர் அல்லது தேன், ஒரு சில துளிகள் பாதாம் எண்ணெய் ஆகியவை தேவைப்படும். ஒரு சிறிய கிண்ணத்தில் மஞ்சள் மற்றும் தயிர் அல்லது தேனை கலந்து கொள்ளுங்கள்.

கைகளால் இவற்றை நன்றாக கலந்து, பின்னர் கூடுதல் ஹைட்ரேஷனுகாக ஒரு சில துளிகள் பாதாம் எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம். 

ஒரு பிரெஷ் அல்லது உங்கள் விரல்களாலேயே இந்த கலவையை உங்கள் கண்களை சுற்றி பொறுமையாக தடவவும். எனினும் கண்களுக்குள் இந்த பேஸ்ட் நுழைந்து விடாதவாறு கவனமாக இருங்கள். இது 10 முதல் 15 நிமிடங்கள் அப்படியே இருக்கட்டும். இந்த சமயத்தில் கண்களை மூடி ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். 

நேரம் ஆனதும் முகத்தை தண்ணீரில் கழுவி ஒரு டவல் பயன்படுத்தி கண்களை ஒத்தி எடுக்கவும். அதன் பிறகு நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் மாய்சரைசரை தடவவும். இதனை அடிக்கடி செய்து வந்தால் நிச்சயமாக உங்களுடைய கருவளையங்கள் கூடிய விரைவில் மறைந்துவிடும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • I trusted director Bala and went astray.. The actor has left cinema இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!