லிப் பாம் முதல் ஃபேஸ் மாஸ்க் வரை… இத்தனை வகையான அழகு சாதன பொருளாக செயல்படும் நெய்!!!

Author: Hemalatha Ramkumar
21 அக்டோபர் 2024, 3:42 மணி
Quick Share

நம்மில் பலருக்கு நெய் என்பது மிகவும் ஃபேவரட். சுட சுட சாதத்தில் சிறிதளவு தாளித்த பருப்போடு உருக்கிய நெய் போட்டு சாப்பிடும் சுவையே தனிதான். நெய் உணவின் சுவையை அதிகமாக்கி நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மைகளை அளிக்கிறது. ஆனால் அதே சமயத்தில் நெய் நம்முடைய சருமத்திற்கும் பல்வேறு நன்மைகளை வழங்க வல்லது. பல நூற்றாண்டுகளாகவே நெய் அதன் அழகு சார்ந்த பண்புகள் காரணமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த பாரம்பரியமான பொருளில் அதிக அளவு ஆன்டி-ஆக்சிடன்ட்கள், கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் A, D, E மற்றும் K ஆகியவை இருப்பதால் நம்முடைய சருமத்திற்கு சிறந்த போஷாக்கை வழங்குகிறது. 

அது மட்டுமல்லாமல் நெய்யானது சருமத்தை மாய்ஸரைஸ் செய்து அதில் உள்ள மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்கள் மாதிரியான வயதான அறிகுறிகளை போக்குகிறது. மேலும் பொலிவிழந்து டல்லாக காணப்படும் சருமத்தை உடனடியாக பளபளப்பாக மாற்றுகிறது. முகப்பருக்கள் மற்றும் ஹைப்பர் பிக்மென்டேஷன் பிரச்சனையை சரிசெய்யும் பண்புகள் கூட நெய்யில் உள்ளது. ஆனால் இந்த விஷயங்கள் பல பெண்களுக்கு தெரிவதில்லை. இது தெரியாமல் விலை உயர்ந்த அழகு சாதன பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறோம். எனவே இந்த பதிவில் நெய்யின் அழகு சார்ந்த நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம். 

இயற்கை மாய்சரைசர்

நெய்யானது நமது சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை அளித்து, வறட்சியைப் போக்கி இயற்கையான மாய்சரைஸராக செயல்படுகிறது. கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த நெய் சருமத்தை மென்மையாக்கி, அதற்கு தங்கம் போன்ற பொலிவை அளிக்கிறது. இந்த பலனை பெறுவதற்கு நீங்கள் உங்களுடைய உடல் மற்றும் முகத்தில் நெய்யை தடவி லேசாக மசாஜ் செய்யலாம். 

அண்டர் ஐ கிரீம் 

நெய்யில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் இருப்பதால் இது கருவளையம், மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்களை போக்கும் அண்டர் ஐ கிரீமாக செயல்படுகிறது. நெய்யில் உள்ள போஷாக்கு கண்களை சுற்றி உள்ள சருமத்தை பளபளப்பாக்கி மென்மையாக்குகிறது. 

கருவளையத்திற்கு தீர்வு காண நினைப்பவர்கள் இரவு தூங்க செல்வதற்கு முன்பு 2 சொட்டு நெய்யை கண்களைச் சுற்றி தடவி, பொறுமையாக மசாஜ் செய்து வந்தால் ஒரே வாரத்தில் நல்ல மாற்றம் தெரியும். 

லிப் பாம் 

ஒரு சிலருக்கு உதடுகள் வறண்டு வெடித்து காணப்படும். இதற்கு உதடுகளுக்கு போதுமான ஈரப்பதம் கிடைக்காததே காரணம். எனவே உங்களுடைய வறண்ட மற்றும் விரிசல் நிறைந்த உதடுகளில் இரவு படுக்க செல்லும் பொழுது நெய் தடவி படுத்தால் காலை எழும்போது உங்களுக்கு மென்மையான மற்றும் குண்டான உதடுகள் கிடைக்கும். நெய் சருமத்தில் உள்ள திசுக்களை பாதுகாத்து அதற்கு தேவையான ஈரப்பதத்தை அளித்து மென்மையாக மாற்றுகிறது. 

இதையும் படிச்சு பாருங்க: அடிக்கடி மூட்டில் காயங்கள் ஏற்படுகிறதா… டெய்லி இதெல்லாம் ஃபாலோ பண்ணா இனி அப்படி நடக்க சான்ஸ் இல்ல!!! 

ஃபேஸ் மாஸ்க் 

நெய்யுடன் தேன் மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து ஒரு ஃபேஸ் மாஸ்க்கை தயாரித்து முகத்தில் தடவலாம். நெய்யில் உள்ள மாய்சரைஸிங் பண்புகள், தேனில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் மற்றும் எலுமிச்சையின் பளபளப்பாக்கும் விளைவு ஆகியவை ஒன்றாக கலந்து உங்கள் சருமத்திற்கு ஈரப்பதம் அளித்து, மென்மையாக்கி அதனை மினுமினுப்பாக மாற்றும். 

ஃபுட் கிரீம் 

சொரசொரப்பாக மற்றும் வறண்டு காணப்படும் உங்களுடைய பாதங்களுக்கு ஆழமான மாய்சரைசிங் விளைவுகளை தருவதற்கு அவற்றில் நீங்கள் நெய்யை பயன்படுத்தலாம். தூங்க செல்வதற்கு முன்பு காலில் நெய்யை தடவி அதன் மீது சாக்ஸ் அணிந்து கொண்டு படுப்பது கால்களில் ஈரப்பதத்தை தக்க வைப்பதற்கு உதவும். நெய்யில் உள்ள கொழுப்பு அமிலங்கள் காரணமாக கூடிய விரைவில் பாத வெடிப்புகள் சரியாகி உங்களுக்கு பட்டு போன்ற மென்மையான பாதங்கள் கிடைக்கும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • ரூ.411 கோடி அரசு நிலம் அபேஸ்? அறப்போர் இயக்கம் கைகாட்டும் அமைச்சர்!
  • Views: - 61

    0

    0

    மறுமொழி இடவும்