வாழை இலையில கூட ஃபேஷியலா… ஆச்சரியமா இருக்கே…!!!

Author: Hemalatha Ramkumar
9 September 2024, 12:23 pm

தமிழ்நாட்டில் வாழை இலையில் சாப்பிடுவது பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வரும் ஒரு வழக்கமாகும். வாழை இலையில் சாப்பிடுவதால் நமக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கிறது.  நம்முடைய ஆரோக்கியம் மற்றும் அழகுக்கு வாழை இலை எவ்வாறு பங்களிக்கிறது என்பதை இப்பொழுது பார்க்கலாம். 

நுண்ணுயிர்களுக்கு எதிராக போராடுகிறது

வாழை இலையில் காணப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட் பண்புகள் பாக்டீரியா வளர்ச்சியை தடுக்கிறது. இதன் காரணமாக இது பாரம்பரிய மருந்து மற்றும் உணவு தயாரிப்பில் பயனுள்ளதாக அமைகிறது. 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது 

வாழை இலைகளில் பல்வேறு வகையான ஆன்டி ஆக்சிடன்ட்கள் காணப்படுகிறது. உதாரணமாக பாலிசிபீனால்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற ஆன்டிஆக்சிடன்ட்கள் வாழை இலையில் உள்ளது. இந்த ஆன்டி ஆக்சிடன்ட்கள் நமது உடலில் உள்ள செல்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும் ஃப்ரீ ராடிக்கல்கள் உருவாவதை தடுக்கிறது. மேலும் ஆக்சிடேட்டிவ் அழுத்தத்தை குறைத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. 

நச்சு நீக்கம் 

நாம் ஏற்கனவே கூறியது போல வாழை இலைகளில் உள்ள ஆன்டிஆக்சிடென்ட்கள் மற்றும் வீக்க எதிர்ப்பு பண்புகள் உடலில் இயற்கையான நச்சு நீக்க செயல்முறைக்கு ஆதரவு தருகிறது. உடலில் உள்ள நச்சு கழிவுகளை அகற்றி, வீக்கத்தை குறைத்து நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. 

செரிமான ஆரோக்கியம்

வாழை இலை செரிமானத்திற்கு அதிக அளவில் உதவுகிறது. செரிமான பாதையை ஆற்றி, வயிறு உப்புசம் மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்கிறது. வாழை இலையில் உள்ள இயற்கை காம்பவுண்டுகள் நல்ல செரிமானத்தை ஊக்குவித்து உணவில் இருந்து ஊட்டச்சத்து சிறந்த முறையில் உறிஞ்சப்படுவதை உறுதி செய்கிறது. 

வீக்க எதிர்ப்பு விளைவுகள்

வாழை இலையில் காணப்படும் ஒரு சில காம்பவுண்டுகளுக்கு வீக்க எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் இது நமது உடலில் வீக்கம் ஏற்படாமல் கவனித்துக் கொள்கிறது. உங்களுடைய அன்றாட உணவில் வாழை இலைகளை சேர்ப்பதன்  மூலமாகவோ அல்லது பாரம்பரிய வைத்தியங்களில் பயன்படுத்துவதன் மூலமாகவோ உங்கள் மூட்டு ஆரோக்கியத்தை நீங்கள் மேம்படுத்தலாம். 

சருமத்திற்கு நல்லது

சருமத்திற்கு வாழை இலைகளை பயன்படுத்துவதா? இது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆம், வாழை இலைகள் சருமத்திற்கும் எக்கச்சக்கமான பலன்களை அளிக்கிறது. வாழை இலையில் உள்ள புரோட்டின் மற்றும் வைட்டமின்கள் சருமத்திற்கு நன்மை அளிக்கிறது. மேலும் வாழை இலையில் காணப்படும் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ போன்ற ஊட்டச்சத்துக்கள் சருமத்திற்கு போஷாக்கு வழங்குகிறது. உதாரணமாக வைட்டமின் சி கொலாஜன் உற்பத்திக்கு அவசியம். இது சருமத்தின் நெகிழ்வுத் தன்மைக்கு ஆதரவு அளிக்கிறது. மேலும் முகத்தில் ஏற்படும்  சுருக்கங்களை குறைக்கிறது. வாழை இலையில் இருந்த தயாரிக்கப்பட்ட கிரீம் சுருக்கங்கள் ஏற்படுவதை தவிர்ப்பதற்கு உதவுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் வாழை இலைகளில் உள்ள வீக்க எதிர்ப்பு பண்புகள் எரிச்சல் அடைந்த சருமத்திற்கு உதவுகிறது. இந்த பலன்களை பெறுவதற்கு நீங்கள் வாழ இலைகளை ஃபேஸ் மாஸ்காக பயன்படுத்தலாம். இதற்கு வாழை இலைகளை அரைத்து தேனுடன் கலந்து முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து கழிவினால் நல்ல  முடிவுகளை பெறலாம்.

  • Revanth Reddy on Pushpa 2ரேவந்த் ரெட்டியை சந்திக்க தயார்…அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக கிளம்பிய திரையுலகினர்..!
  • Views: - 329

    0

    0