தேனுடன் இந்த ஒரு பொருளை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் என்றும் இளமையாக இருக்கலாம்!!!

Author: Hemalatha Ramkumar
17 April 2023, 4:43 pm

தேன் உண்மையிலேயே மிகக் குறைவாக மதிப்பிடப்பட்டுள்ள இயற்கை அழகு சாதன பொருளாகும். பச்சை தேனில் சருமத்திற்கு தேவையான பல சக்திவாய்ந்த கலவைகள் உள்ளன. தேனை ஒரு மூலப்பொருளாகக் கொண்ட பல அழகு சாதன பொருட்களை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். இந்த பதிவில், நீங்கள் முயற்சி செய்ய வேண்டிய சில DIY தேன் ஃபேஷியல்கள் குறித்து பார்ப்போம்:-

தேன் மற்றும் எலுமிச்சை
ஒரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி தேனை எடுத்து அதில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை கலக்கவும். இந்த மாஸ்க் சருமத்தை ஒளிரச் செய்யவும், டான் நீக்கவும் உதவும்.

தேன் & முட்டை
இந்த மாஸ்க் இறந்த செல்கள் மற்றும் கரும்புள்ளிகளை அகற்றுவதில் நன்மை பயக்கும். முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து, அதனுடன் தேன் சேர்த்து, கலவையை நன்கு கலக்கவும். இப்போது இந்த பேஸ்ட்டை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, காய்ந்ததும் அதை அகற்றவும்.

தேன் & தேங்காய் எண்ணெய்
ஒரு ஸ்பூன் தேன் மற்றும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயை ஒன்றாக கலக்கவும். கரும்புள்ளிகள் மீது தடவி வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்யவும். பின்னர் ஒரு சில நிமிடங்களுக்கு அந்த பகுதியை சூடான தண்ணீரில் முக்கி எடுத்த துணியால் மூடி வைக்கவும்.

தேன் & தயிர்
வயது கோடுகள், சுருக்கங்கள் போன்றவற்றைக் குறைப்பதில் இந்த கலவை நன்மை பயக்கும். இரண்டு பொருட்களையும் கலந்து, 15 நிமிடங்கள் வைத்திருந்து முகத்தை கழுவவும்.

தேன் மற்றும் கற்றாழை
இந்த கலவை வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாக்க உதவுகிறது. தேன் மற்றும் கற்றாழையை 2:1 என்ற விகிதத்தில் கலந்து, முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் அப்படியே விடவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • ajith-sir-gives-the-title-good-bad-ugly-said-by-adhik-ravichandran டைட்டில் வச்சதே அஜித்சார்தான்- ஆச்சரிய தகவலை பகிர்ந்த ஆதிக் ரவிச்சந்திரன்